கடி

"பூஜ்யம், சுழி, சூன்யம், சைபர், ஜீரோ....இதெல்லாம் ஒன்றுதான்!''"அதெப்படி சார்!.... ஒன்று எப்படி பூஜ்யமாகும்?
கடி

* "பூஜ்யம், சுழி, சூன்யம், சைபர், ஜீரோ....இதெல்லாம் ஒன்றுதான்!''
"அதெப்படி சார்!.... ஒன்று எப்படி பூஜ்யமாகும்?
ஆர்.யோகமித்ரா, 
எஃப் 2, கிருஷ்ணா அபார்ட்மென்ட், பிளாட் 20, சுந்தர் அவின்யூ, 
மகாசக்தி காலனி, 
செம்பாக்கம், சென்னை - 600073.

* "ஏண்டா தனியா இருக்கே?''
"ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்னு நீங்கதானே சொன்னீங்க சார்!''
தீ.அசோகன், சென்னை-600019.

* "கால் சரியா கேட்கலே!''
"என்ன சொல்றே? கால் நடக்க முடியலேன்னு சொல்லு!....இல்லேன்னா காது சரியா கேட்கலேன்னு சொல்லு''
"அட ...வர்ற ஃபோன் கால் சரியா கேட்கலேன்னு சொன்னேன்''
என்.பர்வதவர்த்தினி, 
சென்னை-600075.

* "எந்த விசேஷத்துக்குப் போனாலும் நான் ரெண்டு இட்லிக்கு மேலே சாப்பிடறதில்லே!''
" அப்படியா? ஏன்?''
"அப்புறம் பொங்கல், வடை, கேசரியெல்லாம் சாப்பிட முடியாதே!''
தீ.அசோகன், சென்னை-600019.

* "செய்வனத் திருந்தச் செய்ன்னு எழுதச் சொன்னா, " செய்வினை திரும்பச் செய்'' ன்னு எழுதியிருக்கியே ஏன்?''
"எங்கப்பா மந்திரவாதி சார்!''
சு.நாகராஜன், 
7/92, தெற்கு தெரு, பறக்கை. 

* "நம்மள "மாணவ மணிகள்' னு ஏண்டா சொல்றாங்க?''
"வகுப்பில் "மணி' மாதிரி சத்தம் எழுப்பிக்கிட்டு இருக்கோமில்லே அதுனாலதான்!''
சு.நாகராஜன், பறக்கை.
வாரம் 2 டி-சர்ட் பரிசு
நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் 
தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com