அங்கிள் ஆன்டெனா

மலைப்பாம்பு மகா சோம்பேறி. ஆபத்துக் காலங்களில்கூட வேக வேகமாகத் தப்பிக்க முயற்சி செய்யாது.
அங்கிள் ஆன்டெனா

கேள்வி: 
மலைப் பாம்புகளைப் பற்றிய செய்திப் படங்களில் எல்லாம் அவை மரக்கிளைகளில் தொங்கிக் கொண் டிருப்பதையும் அசைவற்றுக் கிடப்பதையும் பாக்கிறோம். இது ஏன்?
பதில்: 
மலைப்பாம்பு மகா சோம்பேறி. ஆபத்துக் காலங்களில்கூட வேக வேகமாகத் தப்பிக்க முயற்சி செய்யாது. அகோரப் பசியில் இருக்கும் சமயத்தில் மட்டும் ஏதோ போனால் போகிறதென்று சற்று வேகமாக இரையை நோக்கி முன்னேறிச் செல்லும்.
உயரமான கிளைகளில் ஹாயாகப் படுத்துக் கொண்டிருப்பது அதன் ஹாபி. அதற்கு மிகவும் பிடித்த மானது. சமயங்களில் அப்படியே தலைகீழாகத் தொங்கிக் கொண்டே அசமந்தமாகத் தூங்கிப் போய்விடும்.
முழுமையாக வளர்ந்த ஆறடி மனிதனுக்கே சமயங்களில் பேலன்ஸ் தடுமாறுகிறது. நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்குபவர்களைப் பாருங்கள். கைகள் அங்குமிங்குமாகத் தொங்கும். 
இப்படியிருக்கும்போது 25 அடி நீளம் 350 பவுண்ட் (ஒரு பவுண்டுக்கு எத்தனை கிலோ?) எடை கொண்ட மலைப்பாம்புக்குக் கேட்கவா வேண்டும்? மரக்கிளையில் உருண்டு புரண்டு தூங்கும்போது தலைகீழாகத் தொங்கத் தான் செய்யும்.
மலைப்பாம்பு அசைவற்றுக் கிடப்பதற்குக் காரணம், அதன் இரை. பெரிய உடல் கொண்ட விலங்குகளை அப்படியே விழுங்கி விடுவதால், அவற்றின் கொம்புகள் மற்றும் விரல் நகங்கள் மலைப் பாம்பின் வயிற்றைக் கிழித்துவிடக்கூடுமல்லவா? அதனால்தான் முன்ஜாக்கிரதையாக அசைவற்றுக் கிடக்கிறார் மலைப்பாம்பார்.
அடுத்த வாரக் கேள்வி
உலகில் எத்தனை வகையான எறும்புகள் உள்ளன? அவை எல்லாமே சுறுசுறுப்பானவைதானா?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com