கடவுளின் கடை!

இரவு நேரம். ரமேஷ் அந்தப் பெரிய நகர்ப்புற சாலையில் நடந்து கொண்டிருந்தான்! சட்டென்று அவனது பார்வையில் ஒரு கடை தென்பட்டது!
கடவுளின் கடை!

இரவு நேரம். ரமேஷ் அந்தப் பெரிய நகர்ப்புற சாலையில் நடந்து கொண்டிருந்தான்! சட்டென்று அவனது பார்வையில் ஒரு கடை தென்பட்டது!
 அந்த கடை மிகவும் பெரியதாக இருந்தது! போர்டைப் பார்த்தான் ரமேஷ்! ஆச்சரியமாக இருந்தது! கடையின் பெயர் "கடவுளின் கடை!' என்று இருந்தது! ரமேஷ் உள்ளே சென்றான். விசித்திரமாக இருந்தது. அங்கு அன்பு, பாசம், கருணை, அறிவு, சமயோசித புத்தி, ஜீவகாருண்யம், மன்னிக்கும் தன்மை அத்தனையும் பாக்கெட் பாக்கெட்டுகளாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது! ரமேஷுக்கு இது விசித்திரமாக இருந்தது!
 "அட! இது என்ன ஆச்சரியமா இருக்கே!'.... என்று நினைத்தான். பிறகு இரண்டு பாக்கெட் அன்பு, இரண்டு பாக்கெட் கருணை, இரண்டு பாக்கெட் அறிவு, இரண்டு பாக்கெட் ஜீவகாருண்யம், இரண்டு பாக்கெட் மன்னிக்கும் தன்மை எல்லாவற்றையும் வாங்கினான். பிறகு அவைகளை எடுத்துக் கொண்டு பணம் கொடுக்கும் இடத்திற்குச் சென்றான். அங்கு பாக்கெட்டுகளைக் கொடுத்து "எவ்வளவு பணம் இதற்குச் செலுத்த வேண்டும்?' என்று கேட்டான்.
 ""நீங்கள் எதுவும் செலுத்த வேண்டாம்!.....உங்களுக்காக இவை அனைத்தையும் கடவுள் இலவசமாகக் கொடுத்திருக்கிறார். இதை விலை கொடுத்து யாரும் வாங்க முடியாது! சொல்லப்போனால் இவை அனைத்தையும் நீங்கள் வினியோகம் மட்டுமே செய்யமுடியும்! இன்னொரு விசித்திரம் என்னவென்றால் இவை அனைத்தையும் உங்களுக்கு ஏற்கனவே கொடுத்து விட்டார்! ஆனால் நீங்கள்தான் தாமதமாக டெலிவரி எடுக்க வந்திருக்கிறீர்கள்! ‘' என்று புன்னகையுடன் கூறினான் அங்கிருந்தவன்.
 சட்டென்று விழிப்பு வந்த ரமேஷ் அது ஒரு நல்ல கனவுதான் என்பதை உணர்ந்து மீண்டும் படுத்துக் கொண்டான்!
 -திருமலை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com