தமிழர்த் திருநாள்

செந்நெல் களத்தில் குவிந்தது, செழித்து மஞ்சள் விளைந்தது.
தமிழர்த் திருநாள்

செந்நெல் களத்தில் குவிந்தது,
 செழித்து மஞ்சள் விளைந்தது.
 தன்னல மற்ற உழைப்பினால்
 தமிழர்த் திருநாள் வந்தது.
 
 பழையன எல்லாம் கழிந்தது,
 பாரில் புதுமை நிறைந்தது,
 விழையும் இன்பம் பெருகிடவே
 வெற்றித் திருநாள் மலர்ந்தது.
 
 தங்கம் போலே பயிர்விளைய
 தண்ணொளி வழங்கியக் கதிரவனைப்
 பொங்கல் வைத்துப் போற்றுவோம்,
 புதுமலர்த் தூவி வாழ்த்துவோம்.
 
 உழவுக் குதவும் கால்நடைகள்
 உழைப்பை மதித்தே ஏற்றுவோம்.
 பழகும் அவைகளைப் பாராட்டி
 பாசம் நன்றி காட்டுவோம்.
 
 பெருமை உடனே நாம்வாழ
 பெரியோர் ஆசிகள் வழங்குவார்,
 திருநாள் அன்றே அவர்களது
 காலில் விழுந்து வண்ங்குவோம்.
 
 ஆற்றங்க் கரையில் கூடுவோம்,
 அனைவரும் ஒன்றாய் ஆடுவோம்.
 மாற்றம் பிறக்க இறைவனையே
 மனதால் தொழுதுப் பாடுவோம்.
 
 -கல்லைத் தமிழரசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com