தேடி வரும்!

"குருவே!....என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை'' என்றான் சீடன். "அப்படியா?..... சரி, என்னுடன் தோட்டத்திற்கு வா!'' என்று அவனைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார் குரு.
தேடி வரும்!

"குருவே!....என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை'' என்றான் சீடன். "அப்படியா?..... சரி, என்னுடன் தோட்டத்திற்கு வா!'' என்று அவனைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார் குரு. அங்கு அழகிய பல வண்ணங்களில் பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. குரு சீடனிடத்தில், "அதோ, அங்கே பறக்கின்ற பட்டாம்பூச்சிகளில் ஏதாவது ஒன்றைப் பிடித்து வா!'' என்று சீடனை அனுப்பினார். 
சீடனும் பட்டாம்பூச்சிகளைத் துரத்தித் துரத்தி ஓடினான். ஆனால் பாவம்! அவனால் ஒரு வண்ணத்துப் பூச்சியைக் கூட பிடிக்க முடியவில்லை. மிகவும் சோர்ந்து போய்த் திரும்பி குருவிடம் வந்தான். 
"பரவாயில்லை....வா!....நாம் இந்தத் தோட்டத்தின் நடுவில் நின்று அமைதியாக இந்தத் தோட்டத்தின் அழகை ரசிக்கலாம் என்று அவனை அழைத்துக் கொண்டு தோட்டத்தை சுற்றி வந்தார். அங்கு காணப்பட்ட அழகிய நெடிது உயர்ந்த மரங்களை இருவரும் ரசித்தனர். மரங்களிலிருந்து விழுந்த பூக்கள் வண்ண விரிப்புகளாய் பரவியிருந்ததையும் ,பல நிறங்களில் மலர்ந்த பூக்களையும் ரசித்துப் பார்த்தனர். மரங்களில் சுற்றியிருந்த கொடிகளையும் எல்லா தாவரங்களின் பல வடிவ இலைகளையும், சந்தோஷமாகப் பார்த்தான் சீடன். மரங்களின் ஊடே விழுந்த வெளிச்சங்களையும் ரசித்தான். ஆங்காங்கே பறந்து கொண்டிருந்த தேனீக்களையும், வண்ணத்துப் பூச்சிகளையும் ஆர்வத்துடனும், சந்தோஷத்துடனும் மிகவும் ரசித்தான் சீடன்!
சிறிது நேரத்தில் பல பட்டாம்பூச்சிகள் அவர்களைச் சுற்றிப் பறந்தன. 
அதில் அவன் துரத்திய பட்டாம்பூச்சியும் அவனைச் சுற்றிப் பறந்தது! அது அவன் கையில் வந்து அமர்ந்தது! சீடனுக்கு ஒரே ஆச்சரியம்! 
குரு அவனிடம் சொன்னார். "இதுதான் வாழ்க்கை! மகிழ்ச்சியைத் தேடித்தேடித் துரத்தக்கூடாது. நாம் வாழ்க்கையை அமைதியாய் ரசிக்கும்போது மகிழ்ச்சி நம்மிடம் தானே வந்து சேர்ந்துவிடும்!''

-மயிலை மாதவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com