பொன்மொழிகள்!

மாணவர்களிடமிருந்து சிறந்தவற்றை வெளிக்கொண்டுவர நல்ல ஆசிரியர்களுக்குத் தெரியும்! 
பொன்மொழிகள்!

• மாணவர்களிடமிருந்து சிறந்தவற்றை வெளிக்கொண்டுவர நல்ல ஆசிரியர்களுக்குத் தெரியும்! 
- சார்லஸ் கரால்ட்

• நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். உன்னை பவவீனனாக நினைத்தால் பலவீனனாகவே ஆகிறாய்! 
நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுகிறாய்! 
- விவேகானந்தர்

• காலத்தின் சிறகுகளில் சோகங்கள் பறந்து போகும்! 
- ஜீன் டிலாஃபோண்டேன்

• நமது வரம்புகளை ஏற்றுக் கொண்டவுடன் நாம் அவற்றைக் கடந்து செல்கிறோம்!
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

• பிறரிடமிருந்து நல்லவனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான். 
- இங்கிலாந்து பழமொழி

• காயமே படாதவன்தான் தழும்பைக் கண்டு நகைப்பான். 
- கிரேக்கப் பழமொழி

• நல்ல முடிவுகள் அனுபவங்களிலிருந்து பிறக்கின்றன. ஆனால் அனுபவங்களோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கின்றன.

• நல்ல மனிதர்களோடு நட்பு வைத்திரு. நல்ல மனிதர்களின் சாயலை அடைவாய்! 
- வில்லியம் ஜேம்ஸ்

• நான் வாசித்த எல்லாவற்றையும் சேர்த்த ஒரு பகுதிதான் நான்! 
- தியோடர் ரூஸ்வெல்ட்

• பண்புகளைக் கருத்தில் கொள்ளாது, திறமைகளை மட்டும் அதிகமாக மதிப்பிட வேண்டியதில்லை! 
- எலன் மஸ்க்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com