முத்துக் கதை: குறை கூறும் காரணம்!

மகேந்திரவர்மன் மிதிலாபுரியை ஆண்டு வந்தான். ரவீந்திரர் அவனுடைய மந்திரி. ரவீந்திரர் மன்னனின் செயல்களில் உள்ள குறைகளை
முத்துக் கதை: குறை கூறும் காரணம்!

மகேந்திரவர்மன் மிதிலாபுரியை ஆண்டு வந்தான். ரவீந்திரர் அவனுடைய மந்திரி. ரவீந்திரர் மன்னனின் செயல்களில் உள்ள குறைகளை அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். மன்னனின் காரியங்களில் தவறு எது நேர்ந்தாலும் அவர் அதைச் சுட்டிக்காட்டிக் குற்றம் சொல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.
 மகேந்திரவர்மன் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான். சில சமயம் அமைச்சரை எச்சரித்தும் விட்டான்! அமைச்சர் தன் இயல்பை மாற்றிக் கொள்வதாக இல்லை. மன்னனுக்கு எரிச்சலாக இருந்தது. பொறுமை இழந்த அரசன் அமைச்சரை பதவி நீக்கம் செய்துவிட்டான். பிறகு அமைச்சரை சிறையில் தள்ளிவிட எண்ணினான். இதை அறிந்த அரசனது தாய், "மகனே! நான் கேள்விப்பட்டது உண்மையா? நீ அமைச்சரை சிறையில் தள்ளப் போகிறாயா?'' என்று கேட்டாள்.
 "ஆம் அம்மா!......நான் என்ன செய்தாலும் குறை சொல்வது அந்த அமைச்சரின் வழக்கமாகிவிட்டது!....நான் குறிப்பாகவும் சொல்லிவிட்டேன்....வெளிப்படையாகவும் சொல்லிவிட்டேன்....அமைச்சர் தன்னை மாற்றிக் கொள்ளவே இல்லை. எனக்கு எரிச்சல் ஊட்டிய அவரை சிறையில் தள்ளத்தான் வேண்டும்!''என்றான் மகேந்திரவர்மன்.
 "உன்னை மிக உயர்ந்தவனாக நினைக்கும் அமைச்சரையா கைது செய்து சிறையில் தள்ளப்போகிறாய்?''
 "என்னம்மா சொல்கிறாய்? எனக்கு விளங்கவில்லையே...என்னை எப்பொழுதும் குறை சொல்லும் அமைச்சர் என்னை உயர்வாக நினைக்கிறாரா? நம்ப முடியவில்லையே!''
 "மகனே!...தன்னைத் திருத்திக் கொள்ளும் பண்பு உடையவர்களிடம்தான் பெரியவர்கள் குறைகள் சொல்வார்கள்!....உன்னிடம் அந்த நற்பண்புகள் இருப்பதை எண்ணித்தான் அமைச்சர் உன்னைக் குறை சொல்லி இருக்கிறார்!''
 இதைக் கேட்ட மகேந்திரவர்மன், "அம்மா!....நான் பெருந்தவறு இழைக்க இருந்தேன்!....அதை நீங்கள் தடுத்துவிட்டீர்கள்!''
 என்று கூறிவிட்டு, அமைச்சரிடம் மன்னிப்பு கேட்க நேராக அவர் இல்லத்திற்கே விரைந்தான்.
 
 -அ. ராஜா ரகுமான்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com