யார் ஏழை?

பிரதான சாலையிலிருந்த ஒரு ஜவுளிக்கடைக்கு முன்னால் ஒரு கார் வந்து நின்றது! காரிலிருந்து ஜகதாம்பாள் இறங்கினாள்
யார் ஏழை?

பிரதான சாலையிலிருந்த ஒரு ஜவுளிக்கடைக்கு முன்னால் ஒரு கார் வந்து நின்றது! காரிலிருந்து ஜகதாம்பாள் இறங்கினாள். கடைக்குள் நுழைந்தாள். அங்கு புடவைகள் இருக்கும் பகுதிக்குச் சென்றாள். அங்கிருந்த விற்பனையாளரிடம், ""சார், என் மகனுக்குக் கல்யாணம்! வேலைக்காரிக்குக் கொடுக்க குறைந்த விலையுள்ள புடவையா ஒண்ணு கொடுங்க...'' என்று கேட்டாள்! கடைக்காரரும் விலை குறைந்த புடவைகளை எடுத்துப் போட்டார். ஒரு புடவையை தேர்ந்தெடுத்தாள் ஜகதாம்பாள். பணத்தைக் கொடுத்துவிட்டு புடவை இருந்த பையை எடுத்துக்கொண்டு காரை நோக்கி விரைந்தாள்.
 சிறிது நேரம் சென்றது. அதே கடைக்கு வந்தாள் ஜகதாம்பாள் வீட்டு வேலைக்காரி. கடை விற்பனையாளரைப் பார்த்து, "ஐயா, என் பையனுக்கு கல்யாணம் வரப்போகுது! நாளைக்கு எங்க எஜமானியம்மா வீட்டுக்கு எங்க வீட்டுக்காரரோட கல்யாணத்துக்கு அழைக்கப் போறேன்! நல்ல விலை உயர்ந்த புடவையா ஒண்ணு எடுங்க'' என்று கேட்டாள்!
 நீதி: பரந்த மனம் உள்ளவர்களே நிஜமான செல்வந்தர்கள்!
 -மாதவன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com