அங்கிள் ஆன்டெனா

உலகில் எத்தனை வகையான எறும்புகள் உள்ளன? அவை எல்லாமே சுறுசுறுப்பானவைதானா?

கேள்வி : உலகில் எத்தனை வகையான எறும்புகள் உள்ளன? அவை எல்லாமே சுறுசுறுப்பானவைதானா?

பதில் : எறும்புகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இனங்கள் இருக்கின்றன. இவற்றில் தொண்ணூறு சதவீதம் வரை கருப்பு, பழுப்பு மற்றும் சிவப்பு நிறங்களில்தான் இருக்கின்றன. சில வகை இங்கிலீஷ் (ஐரோப்பிய மற்றும் பிரிட்டிஷ்) எறும்புகள் பச்சை நிறத்தில் கூட இருக்கின்றன.
நிற பேதங்கள் இல்லாமல் அநேகமாக எல்லா எறும்புகளும், நம்ம ஊர் பிள்ளையார் எறும்பு ரேஞ்சுக்கு படு சுறுசுறுப்பான பேர்வழிகள்தான். 
வாசல் பக்கமாக வீட்டுக்குள் நுழைந்து, தரை, சுவர் நடந்து, ஏறி, கிச்சனுக்குள் புகுந்து அலமாரி மேல்தட்டில் இருக்கும் சர்க்கரையைச் சாப்பிட எவ்வளவு சிரமப்படுகிறது? 
இவ்வளவு கஷ்டப்படாமல் அடுத்தவன் உழைப்பில் வாழும், ஒருவகை சோம்பேறி எறும்பும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வகை எறும்புகள், சில நோஞ்சான் எறும்புகளைத் தங்களின் கைப்பாவைகளாக
வைத்துக் கொண்டு, அவற்றை தேனைக் குடித்து வரச் செய்யுமாம். அளவுக்கு மீறி குடித்துவிட்டு வரும் இந்த நோஞ்சான்கள், நடக்க முடியாமல் வந்து தேனைக் கக்கி விடுமாம். 
அந்தத் தேனை தலைவன் எறும்பு குடித்து தனது பசியைத் தீர்த்துக் கொள்ளுமாம். 
இப்படி ஒரு வகை இருப்பதாகச் 
சொல்கிறார்கள். இதெல்லாம் ஒரு பிழைப்பா என்று தோன்றுகிறதல்லவா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com