நெஞ்சில் நிற்கும் மெர்சி!: ஞானக்கிளி! - 9

ஞானம் உரிய நேரத்தில் வந்துவிட்டது! பிள்ளைகளைக் காணோம்! அங்குமிங்கும் பார்த்தது. சிவகாமி தென்பட்டாள். பின் ஒவ்வொருவராக வந்தார்கள். 
நெஞ்சில் நிற்கும் மெர்சி!: ஞானக்கிளி! - 9

ஞானம் உரிய நேரத்தில் வந்துவிட்டது! பிள்ளைகளைக் காணோம்! அங்குமிங்கும் பார்த்தது. சிவகாமி தென்பட்டாள். பின் ஒவ்வொருவராக வந்தார்கள். 

""எங்க பள்ளிக்கூடத்திலே மெர்சின்னு ஆசிரியை ஒருவர்.....அவருக்கு இன்று பணி நிறைவு....நாங்க எல்லோரும் சேர்ந்து பிரியாவிடை கொடுத்தோம். நினைவுப் பரிசு கொடுத்தோம்..... எல்லோருக்கும் சிற்றுண்டி.... மெர்சி நெகிழ்ந்து போனாங்க....'' 
அதைக் கேட்டு ஞானமும் நெகிழ்ந்தது. அவங்க நடத்தற பாடம் கரும்பு போல இனிக்கும்....எவ்வளவு கஷ்டமான பாடத்தையும் எளிமையா சொல்லுவாங்க.....ஒரு கருத்தை மனசிலே பதிய வைக்க அவங்க நிறைய படிப்பாங்க....பாடத்தோட அப்படியே ஒன்றிப் போவாங்க....நாங்களும்தான்!....பள்ளிக்கூடம் முடிஞ்சாலும் பிள்ளைங்க போகாம அவங்களைச் சுற்றயபடி நிற்பாங்க....''
 சிவகாமி மெர்சியை கண்களில் நிறுத்தினாள்!....
""சந்தனத்தைத் தொட்ட கை மணக்கும் மெர்சியோட பணியும் அப்படி இருக்கே...''
""கிளியக்கா அவங்க கையிலே எடுத்த ஆயுதம் எது தெரியுமா?''
 ""தெரியாதே...''
""அன்பு!....அதனாலே மெர்சிங்கிற பூவைச் சுற்றும் தேனீக்களா....,வண்டுகளா....,பட்டாம்பூச்சிகளா... நாங்க ஆயிட்டோம்!
மரம் பற்றிய பாடமா....அது மரங்கள் உள்ள இடத்தில்தான் நடக்கும்...''
 ""அப்புறம் என்ன? பாடம் தேன் போல இனிக்கும்!...'' என்றது ஞானம்.
""பாடம் மட்டுமா....பள்ளிக்கூடத்திலே மரக்கன்று நட்டாங்க....அவங்க வீடு இருக்கிற தெருவையும் பசுமையாக்கிட்டாங்க...''
பாத்திமா எழுந்தாள்..... ""எங்கள் ஒவ்வொருவர் பெயரும் அவங்களுக்குத் தெரியும்!....ஏழைப் பிள்ளைகள் இருக்கிற குடிசைப் பகுதிக்கு அடிக்கடி வருவாங்க..... உடைகள்....
புத்தகங்கள்.....குறிப்பேடு தருவாங்க.....பழங்கள் தருவாங்க.....யாருக்காவது உடம்பு சரியில்லேன்னா மருத்துவரிடம் அழைச்சுப் 
போவாங்க.....மெர்சிக்காகவே பலர் ஆர்வத்தோடு படிக்க வந்தாங்க...''
""இதிலிருந்து என்ன தெரியுது?....'' இது ஞானத்தின் கேள்வி. 

""புத்தகங்கள் புதுமையாக வந்தாலும்....கணிணி...இணைய தளம்....முகநூல்.....கட்டுரைப் பக்கம்.....ஸ்மார்ட்போன்.....ரோபோக்கள்.....என எத்தனை நவீனக்கருவிகள் வந்தாலும் ஆசிரியர் இடத்தை எவற்றாலும் இட்டு நிரப்ப முடியாது......இவையெல்லாம் அறிவைக் கூட்டலாம்....கொட்டலாம்.....அன்பையும் உயிர்ப்பையும், உணர்வையும் அளிக்க முடியுமா?.....எங்கள் உடலையும் உள்ளத்தையும் அக்கறையோடு கவனிக்க முடியுமா?...''

சிவகாமி சொல்லும்போதே உணர்வு பொங்கியது....ஞானம் அவள் கன்னத்தில் முத்தமிட்டு தோளில் அமர்ந்தது. அவள் மனம் குளிர்ந்து போனாள். 
 பாபு ஏதோ சொல்ல விரும்புவதை ஞானம் கவனித்தது. 
""சொல்லு பாபு...''
""மனிதன் என்றாலே பொறாமையும் உடன் பிறந்தது....ஆனால் பொறாமை இல்லாத ஒரே இனம் ஆசிரியர் இனம்தான்...''
ஞானம் உவகை அடைந்தது.
""காரணம் என்ன தெரியுமா?...உங்களைப் போன்ற கள்ளம் கபடம் இல்லாத பிள்ளைகளோடு அவர் அன்போடு பழகுகிறார் அல்லவா?..., அதனால்தான்!''
அதைக் கேட்டு எல்லோரும் கையொலி எழுப்பினார்கள்.
கிளி வரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com