முத்துக் கதை: குக்கர் மூடி!

"அம்மா கிணற்றுக்குள் வாளி விழுந்து விட்டது" அலறினான் ராமு கிணற்றடியில் இருந்து.
முத்துக் கதை: குக்கர் மூடி!

"அம்மா கிணற்றுக்குள் வாளி விழுந்து விட்டது" அலறினான் ராமு கிணற்றடியில் இருந்து.
ராமனுஜம் மாமா வீட்டுக்குப் போய் பாதாளக்கரண்டி வாங்கிட்டு வாடா" என்றாள் அம்மா.
டவுசரைப் பிடித்துக்கொண்டு ஓடினான்.
மாமா கிணற்றில் வாளி விழுந்து விட்டது.  பாதாளக்கரண்டி வாங்கி வரச்சொன்னாள் அம்மா"  என்றான் .
"குக்கர் மூடி கொண்டு வந்திருக்கியா?" என்றார் மாமா.  
அதை ஏன் கொண்டு வரணும்" என்று கேட்டான்.
""பேசாமல் வீட்டுக்குப் போய் மாமா குக்கர் மூடி கேட்டார்னு சொல். அம்மா தருவாங்க. கொண்டு வந்து கொடுத்துட்டு பாதாளக்கரண்டிய வாங்கிட்டுபோ தம்பி''  என்றார் ராமுவிடம்.
""ஏம்மா....அந்த மாமா பாதாளக்கரண்டி கேட்டதுக்கு பதிலா குக்கர் மூடியை க் கொண்டு வரச்சொல்றார்?  நாமதான் அவங்களுக்கு நல்லா தெரிந்தவர்களாச்சே!
""அதுக்கில்லடா பாதாளகரண்டிய வாங்கிட்டு போவாங்க. கிணற்றிலிருந்து வாளியைஎடுப்பாங்க..... நாளைக்கு திருப்பிக் கொடுத்துக்கலாம்னு அப்படியே வீட்டுல வச்சிட்டு மறந்துடுவாங்க. வேறு யாராவது வந்து பாதாளக்கரண்டிய கேட்கும்போது மாமாவுக்கும் யாரிடம் கொடுத்தோம் என்பது மறந்து போயிடும்.  ரொம்ப நாட்கள் கூட வீட்டிலேயே வெச்சுப்பாங்க.... அதான் பதிலுக்கு ஏதாவது  வாங்கிவச்சிகிட்டு பாதாளக்கரண்டிய கொடுப்பாங்க. அடிக்கடி உபயோகிக்கும் முக்கியமான பொருளா இருந்தா வாங்கிட்டுப்  போனவர்களுக்கும் உடனே பாதாளக்கரண்டிய திருப்பிக்கொடுக்கணும்னு எண்ணம் வரும். குக்கர் மூடி தினம் சமையல் செய்ய தேவைப்படும்.
அதனால கிணற்றிலிருந்து வாளியை எடுத்த  உடனே திருப்பிக் கொடுத்திடுவோம்''  என்று விளக்கம் கொடுத்தாள்.
இரண்டு நாட்களில் வீட்டு வாசலில் குரல் கேட்கவே எட்டிப்பார்த்தான் ராமு.
ராமானுஜம் மாமா நின்று கொண்டிருந்தா்.
""வாங்க மாமா''  என்று அழைத்தான் .
""அப்பா இல்லையா?''
""வெளியே போயிருக்கார்...'' என்றான்.
""உங்க வீட்டு மண் வெட்டிய தா தோட்டத்தை கொத்தி சரிபடுத்தணும்...''  என்றார்.
""மாமா குக்கர் மூடிய கொண்டு வந்திருக்கீங்களா?''  என்று கேட்டதும் வெலவெலத்துப் போனார்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com