அங்கிள் ஆன்டெனா

நூற்றுநாற்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த "மிúஸாசாயிக்' காலத்தில்தான் ஊர்வனவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றுப் பறவைகள் தோன்றின
அங்கிள் ஆன்டெனா

கேள்வி: 
பூமியில் தோன்றிய உயிரினங்களில் பரிணாம வளர்ச்சியடைந்து, இறக்கைகள் முளைத்து முதன்முதலில் ஆகாயத்தில் பறந்த பறவை எது தெரியுமா?

பதில்: 
நூற்றுநாற்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த "மிúஸாசாயிக்' காலத்தில்தான் ஊர்வனவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றுப் பறவைகள் தோன்றின. தற்காலத்தில் உலகெங்கிலும் 27க்கும் மேற்பட்ட ஆர்டர்களாகவும், 155க்கும் மேற்பட்ட குடும்பங்களாகவும் வகைப்படுத்தப்பட்ட 9000 பறவையினங்கள் பூமியில் உலா வருகின்றன.
இன்னும் வகைப்படுத்தப்படாத பல பறவைகள் இருக்கின்றனவாம். இன்றைய பறவையினங்களுக்கும் அன்றைய ஊர்வனவற்றிற்கும் இடையிலான ஓர் உயிரினம்தான் பூமியில் தோன்றிய முதல் பறவை. இதை அவ்வளவு எளிதாக நிச்சயமாகப் பறவையென்றும் சொல்லிவிட முடியாது. இதற்குப் போதுமான ஆதாரங்கள் பவேரியா நாட்டுப் புதைபடிமங்களில் கிடைத்திருக்கிறது.
குழிவான எலும்புகளைச் சுற்றி அமைந்த சிறகுகள், சிறகுகளில் உள்ள வளைந்த நகங்கள், ஊர்வனவற்றைப் போன்ற நீண்ட வால் இந்தப் பறவைக்கு இருந்திருக்கிறது. போனஸாக பற்கள் வேறு இருந்ததாம்! அம்மாடியோவ்!
- ரொசிட்டா
அடுத்த வாரக் கேள்வி
விலங்குகள் வாழும் இடங்களான குகைகள் புதர்கள் போன்றவற்றை விட பறவைகள் வாழும் இடங்கள் அழகாக இருக்கின்றனவே, இதற்குக் காரணம் ஏதும் உள்ளதா?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் 
நல்ல பதில் கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com