நூல் புதிது!

அறம் செய விரும்பு, ஆறுவது சினம் எனத் தொடங்கும் ஒüவையாரின் ஆத்திச்சூடி வரிகளை தலைப்பாக வைத்து எழுதப்பட்ட 51 கதைகள் இதில் உள்ளன. ஒவ்வொரு கதைக்கும்
நூல் புதிது!

* ஆத்திச்சூடிக் கதைகள் (படங்களுடன்)
ஆசிரியர் : கள்ளிப்பட்டி சு.குப்புசாமி
பக்கம் : 176; விலை : ரூ 120/-
அறம் செய விரும்பு, ஆறுவது சினம் எனத் தொடங்கும் ஒüவையாரின் ஆத்திச்சூடி வரிகளை தலைப்பாக வைத்து எழுதப்பட்ட 51 கதைகள் இதில் உள்ளன. ஒவ்வொரு கதைக்கும் முடிவில் அதற்குப் பொருத்தமான திருக்குறளையும் இணைத்திருப்பது சிறப்பு! (வெளியீடு : சஞ்சீவியார் பதிப்பகம், ஸ்ரீவாரி அடுக்ககம், 23/4 கவரைத் தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை - 600015, போன் : 9500172822)

* தேவதைக்கதைகள்
ஆசிரியர் : கே. முரளிதரன்
பக்கம் : 104; விலை : 105/-
சுட்டி விகடனில் வெளிவந்து மாணவர்களை மகிழ்வித்த 10 கதைகளுடன் 4 கதைகள் போனஸôகத் தரப்பட்டிருக்கின்றன. அனைத்தும் ஜெர்மானிய நாடோடிக் கதைகள்! ஹாசிப்கான் ஓவியங்களுடன் தமிழில் அழகாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சுவாரசியமான கதைப்புத்தகம்! குழந்தைகளுக்குப் பரிசளிக்க உகந்தது! (வெளியீடு : விகடன் பிரசுரம் : 757, அண்ணாசாலை, சென்னை - 600002, போன் : 044-42634283.)

* பறக்கும் யானையும் பேசும் பூக்களும்
ஆசிரியர் : உழவுக் கவிஞர் உமையவன்
பக்கம் : 112; விலை : ரூ 60/-
சிறுவர்களுக்கான 15 சிறுகதைகள் கொண்ட நூல். "பறவைகள் நடத்திய பள்ளிக்கூடம்' ...."பட்டாம்பூச்சிகள் கொண்டாடிய தீபாவளி' ...." விலங்குகள் கொண்டாடிய பொங்கல்" என ஒவ்வொரு கதையும் குழந்தைகளைக் கவரும்! (வெளியீடு : பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை - 600014, போன் : 0431-2702160)

* பாப்பாவுக்குப் பாட்டு (சிறுவர் பாடல் தொகுப்பு)
ஆசிரியர் : ருக்மணி சேஷசாயி
பக்கம் : 64; விலை : ரூ 80/-
நாமே சொந்தமாக ராகம் போட்டுப் பாடத்தக்க எளிமையான பாடல்கள்! "எங்கள் வீட்டு நாய்க்குட்டி'...., "பசுவும் கன்றும்' ..."புள்ளிமான்' ...."சிட்டுக்குருவி'.... என பல விலங்குகள் பற்றிய பாடல்கள்! மற்றும் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி பற்றிய பாடல்களும் உண்டு! மொத்தம் 31 பாடல்கள் படங்களுடன் தரப்பட்டுள்ளன! (வெளியீடு : சாயி பதிப்பகம், 6/18, மேற்கு வன்னியர் தெரு, மேற்கு கே.கே.நகர், சென்னை - 600078, போன் - 9444700569)

* பொம்மையாகவே இருக்கப்பிரியப்படுகிறார் கடவுள்!
ஆசிரியர் : துஷ்யந்த் சரவணராஜ், 
பக்கம் : 64; விலை : ரூ 60/-
"எந்தப் பூவிலும் இல்லை...குழந்தையின் கொட்டாவி வாசம்' ...."குழந்தைகள் கடித்துத் தருவது காக்கா கடி இல்லை...கடவுள் கடி'....என்பன போன்ற "ஹைக்கூ' கவிதைகள் பல அடங்கிய நூல்! அணிந்துரைகளில் குவிந்துள்ள தகவல்கள் ஏராளம்! (வெளியீடு : வெற்றி மொழி வெலியீட்டகம், 29/15, முதல் தளம், கிழக்கு ரத வீதி, திண்டுக்கல் - 624001. போன் - 9715168794)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com