விடுகதைகள்

வகை வகையாய்த் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப் படம்...

1. தாய் இனிப்பாள், மகள் புளிப்பாள், பேத்தி மணப் பாள்...
2. உருவத்தில் சிறியவன், படபடவெனப் பொறிவான்... இவன் யார்?
3. ஈட்டிப்படை வென்று, காட்டுப் புதர் கடந்தால், இனிப்போ இனிப்பு...
4. ஊதினால் பறக்கும், அதன் மதிப்பை உலகமே மதிக்கும்...
5. ஐந்து அடுக்கு, நான்கு இடுக்கு...
6. இரவும் பகலும் ஓய்வு இல்லை, இவன் படுத்தால் எழுப்ப ஆள் இல்லை...
7. இந்தக் கதவு திறந்து திறந்து மூடினாலும், சிறிதளவும்ஓசை வராது...
8. வகை வகையாய்த் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப் படம்...
9. மென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன்...
விடைகள்:
1. பால், தயிர், நெய் 
2. கடுகு
3. பலாப்பழம்
4. கரன்சி நோட்டு
5. விரல்கள் 
6. இதயம்
7. கண் இமை
8. கனவு 
9. நத்தை
-ரொசிட்டா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com