கேளு கண்ணே! -ராஜம் பப்ளிகேஷன்ஸ்

1965இல் "ராஜம் பப்ளிகேஷன்ஸ்' வெளியீட்டில் "பூர்ணிமா சகோதரிகள்' பள்ளிக் குழந்தைகளுக்காக எழுதிய சில குறிப்புகள்!
கேளு கண்ணே! -ராஜம் பப்ளிகேஷன்ஸ்

1965இல் "ராஜம் பப்ளிகேஷன்ஸ்' வெளியீட்டில் "பூர்ணிமா சகோதரிகள்' பள்ளிக் குழந்தைகளுக்காக எழுதிய சில குறிப்புகள்!

• எண்ணை பற்றிக் கொண்டால் என்ன செய்வது?
பெட்ரோல் மண்ணெண்ணெய் போன்ற எண்ணெய் பற்றிக் கொண்டால் அதை அணைக்கத் தண்ணீர் ஊற்றக் கூடாது. தண்ணீரில் எண்ணெய் எப்போதும் மிதக்கும். தண்ணீர் கொட்டியதும் எண்ணெய் மிதப்பதால் தண்ணீரின் மேல் எண்ணெய் வந்து எரியும்.ஆகையால் எண்ணையில் தீப்பற்றினால் மணலைக் கொட்டித்தான் அணைக்க வேண்டும். 

• எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்? 
ஒரு நாளைக்கு நாம் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்பது பலருக்குத் தெரியாது. நமது மூளை ஓய்வு பெறும்போது நம்முடைய எண்ணங்களால் அசையும் உடல் உறுப்புகள் எல்லாம் ஓய்வு பெறுகின்றன. மூளைக்கு ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் ஓய்வு கொடுக்க வேண்டும். ஆகையால் ஒரு மனிதன் எட்டு மணி நேரம் தூங்கினால்தான் இந்த நான்கு மணி நேர ஓய்வு மூளைக்குக் கிடைக்கும். நாளெல்லாம் தூங்குபவர்களுக்கு இந்த விதி தேவையில்லை. 

• பேயோ பிசாசோ என்று பயப்படாதீர்கள்!
இரவில் நாம் தூங்கும் போது மரக்கட்டிலிலோ பக்கத்தில் உள்ள மேசையிலோ, நாற்காலியிலோ ஏதோ ஒருவகைச் சத்தம் கேட்கும்! இந்தச் சத்தத்தைக் கேட்டு மேசை நாற்காலி அசைகிறது!....பேயோ, பிசாசோ வந்து விட்டது என்று பயப்படாதீர்கள்! மரச் சாமான்கள் எல்லாவற்றிலும் இத்தகைய சத்தம் கேட்கும்! ஏன் தெரியுமா? மரச் சாமான்கள் இரவின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றபடி விரிந்து சுருங்குவதால் இப்படிக் கிறீச்சிடும் சத்தம் கேட்கும்!

• புருவங்கள் எதற்கு? 
மனிதனுக்குக் கண்களின் மேல் புருவங்கள் ஏன் இருக்கின்றன தெரியுமா? பலருக்குத் தெரியாது. தலையிலிருந்து நிறைந்த அளவுக்கு அழுக்கும் வியர்வையும் நெற்றியின் வழியாக வழிந்து கண்களில் விழும். இந்த வியர்வையையும் அழுக்கையும் தடுத்து நிறுத்துவதற்காகத்தான் கடவுள் நமக்குப் புருவங்களை அமைத்திருக்கிறார். 

• பாம்பின் வாயில் புகுந்தது திரும்பாது!
பாம்பு எதையாவது பிடித்து விழுங்கினால் அப்படியே முழுசாக விழுங்க வேண்டியதுதான். பாதியை விழுங்கிவிட்டு, பாதியை வெளியே துப்ப முடியாது. அதன் பற்கள் நீண்டு உட்புறம் வளைந்திருப்பதால் அதன் வாயில் சிக்கிய எந்த ஜந்துவும் அப்படியே உள்ளே போக வேண்டியதுதான்! பாம்பின் வாயில் சிக்கிய பிராணி பாம்பின் பலத்தைவிடச் சற்று பலமுள்ளதாக இருந்தால் பாம்பு அதை விழுங்கவும் முடியாது!...விடவும் முடியாது!...அப்படியே திணறி இறக்க வேண்டியதுதான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com