நூல் புதிது

உயிர் மூச்சு, குழந்தைகளுக்கான ஆப்பிரிக்கப் பழங்கதைகள், அழகு பொம்மைப் பச்சைக்கிளி
நூல் புதிது

உயிர் மூச்சு
ஆசிரியர் - எஸ்.டி.பாலகிருஷ்ணன்
பக்கம் - 32, விலை - 40
கிராமத்தை முற்றுகையிட்ட விலங்குகள்,.... காக்கா நிறம் வெள்ளை,....தியா சொன்ன புதையல்,....உயிர் மூச்சு,....போன்ற நான்கே கதைகள்! காடழிப்பைப் பற்றிய விழிப்புணர்ச்சி, சமூகத்தில் நிற, இன பேதம் பார்க்காமை, நீர் மேலாண்மை, இயற்கையைப் போற்றிப் பாதுகாத்தல் என்ற நோக்கில் தியா, மற்றும் பாட்டியின் உரையாடல்கள் மூலம் அருமையாக எழுதப்பட்டுள்ளன! அழகிய வண்ண அட்டை, குழந்தைகள் படிப்பதற்கு ஏற்ற படங்களுடன் சிறப்பாக அமைந்துள்ளது இந்நூல்!
வெளியிட்டோர் - அறிவியல் வெளியீடு, 245, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை - 600086 தொலைபேசி - 044 - 28113630.

குழந்தைகளுக்கான ஆப்பிரிக்கப் பழங்கதைகள்
தொகுப்பு - எஸ்.பி.ஸாக்ஸ், தமிழில் - எம்.பாண்டியராஜன்
பக்கம் - 100, விலை - ரூ 99/-
கதைகள் எவ்வாறு நம்மிடம் வந்தன என்பதற்காக ஒரு கதை என்கிற முன்கதையுடன் புத்தகம் விறுவிறுப்பாக எழுதப்பட்டுள்ளது. முதல் கதையான "கழுதைகளின் தாய்' சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது, இரண்டு தவளைகள், சூழ்ச்சிக்காரப் பூனை, நாக்கைப் பற்றிய ஒரு கதை, ஒரு பூனையும் அதன் வலுவான நண்பர்களும் போன்ற 42 கதைகளின் தொகுப்பு! நீதிகளை யதார்த்தமாகச் சொல்லும்
கதைகள்!
வெளியிட்டோர் - நெஸ்லிங் புக்ஸ் பப்ளிஷிங் (பி) லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் அம்பத்தூர் - சென்னை - 600098. தொலைபேசி - 04426251968.

அழகு பொம்மைப் பச்சைக்கிளி
ஆசிரியர் - கவிச்சிற்பி கவிதைத்தம்பி
பக்கம் - 72, விலை - ரூ 60/-
பச்சைக்கிளி, எனக்குப் பிடித்த தெய்வம், பள்ளி, ஈரமுள்ள இதயம், போன்ற 57 கவிதைகளின் தொகுப்பு. அன்னையைத் தெய்வமாக வணங்கும் கவிதை, நூலகத்தின் பயன், தூய்மையை வலியுறுத்தல், பழமொழிகளைப் போற்றுதல், போன்ற சமூக அக்கறைகொண்ட பாடல்களும், மற்றும் பல்சுவை கொண்ட
கவிதைகளும் எளிமையாக சுவையூட்டும் பாடல்களாய் எழுதப்பட்டுள்ளன. படிக்க மற்றும் பின்பற்றத் தக்கவை!
வெளியிட்டோர் - சஞ்சீவியார் பதிப்பகம், டி-1,ஸ்ரீவாரி பிளாட்ஸ், முதல் மாடி, எண் 23/11, கவரை தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை - 600015, தொலைபேசி - 04424890151, கைபேசி - 9500172822

அறிவியல் தொழில் நுட்பம் பற்றி
அறியலாம் வாங்க
ஆசிரியர் - எஸ்.சுந்தரம், பக்கம் - 104, விலை - 75/-
சில ரயில் வண்டிகள் சக்கரமில்லாம் ஓடும் ரகசியம்,...உங்களது மணிக்கட்டில் ஒரு கணிப்பொறியை எடுத்துச் செல்கிறீர்கள் எப்படி?.... வெப்பத்தைக் கண்களால் பார்க்க முடியுமா? பூமி ஏன் சூரியனைச் சுற்றி வருகிறது?,.... பொய் சொன்னால் கண்டுபிடிக்கும் திறன்?...போன்ற, நாம் அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கும் 50 கேள்விகளுக்கு ஆசிரியர் எளிமையாகக் குழந்தைகளும் புரிந்து கொள்ளும் வகையில் விவரித்துள்ளார்! பயனுள்ள நூல்! மாணவர்களுக்கு சுவாரசியமான நூல்!
வெளியிட்டோர் - ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32-பி,
கிருஷ்ணா தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை - 600017. தொலைபேசி - 044 - 24331510.

பட்டி, வேதாளம், விக்கிரமாதித்தன் கதைகள்
ஆசிரியர் - பி.எஸ்.ஆச்சார்யா
பக்கம் - 532, விலை - 400/-
ஆசிரியருக்கு அறிமுகம் தேவையில்லை. ஏற்கனவே பஞ்சதந்திரக்கதைகள்,மற்றும் பல ஆன்மீக நூல்கள், வைத்திய நூல்கள் போன்ற பல நூல்களைஎழுதியவர். இந்நூல் 79 கதைகளின் தொகுப்பு. அனைத்தும் சிறியவர் முதல் பெரியோர் வரை எல்லா வயதினருக்கும் சுவாரசியமானது! அழகிய பைண்டிங் முகப்புடன் கூடிய பெரிய புத்தகம்!
வெளியிட்டோர் - நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தியாகராயநகர், சென்னை - 600017. தொலைபேசி - 044 - 24334397, கைபேசி - 9840226661, 9940045044.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com