முருங்கை மரம்!:   என்ன குழந்தைகளே நலமாக  இருக்கிறீர்களா ?

நான் தான் முருங்கை மரம் பேசுகிறேன். என்னுடைய தாவரவியல் பெயர் மொரிங்கா ஆலிஃபெரா,  நான் மொரிங்கேசி  குடும்பத்தைச் சேர்ந்தவள்.
முருங்கை மரம்!:   என்ன குழந்தைகளே நலமாக  இருக்கிறீர்களா ?

நான் தான் முருங்கை மரம் பேசுகிறேன். என்னுடைய தாவரவியல் பெயர் மொரிங்கா ஆலிஃபெரா,  நான் மொரிங்கேசி  குடும்பத்தைச் சேர்ந்தவள். மொரிங்க என்பது முருங்கை என்ற தமிழ் பெயரிலிருந்து உருவாக்கப்பட்ட பெயர். ஆலிஃபெரா என்றால் எண்ணெயுடைய விதையைக் குறிக்கும். 

குழந்தைகளே, நான் ஒரு மருத்துவப் பொக்கிஷம், ஆரோக்கியப்  பெட்டகம்.   என்னுடைய காயை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். என்னிடம் அதிகம் சத்துகள் உள்ளன. நீங்கள் வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் ல் 4 மடங்கு "வைட்டமின் "ஏ' சத்தும், வாழைப்பழத்தைப் போல் 3 மடங்கு பொட்டாசியம் சத்தும், தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் சத்தும்  உள்ளன.  எந்த கீரையிலும் இல்லாத அதிக அளவில் 75 மடங்கு இரும்பு சத்து உள்ளன. அதனால் என்னையும் "பிரம்ம விருட்சம்' என்றே சித்தர்கள் அழைத்தனர்.  

"ஒரு முருங்கை மரமும், ஒரு பசுவும் இருந்தால், விருந்தாளிக்கு மனம் களிக்கச் செய்வேன்' என்ற பழமொழி வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் வேண்டும் என்பதையும், நான் மருந்தாகவும், விருந்தாகவும் விளங்குவேன் என்பதையும் விளக்குகிறது.   

நான் அதிகம் வலுவில்லாதவள் தான். ஆனால், என்னுடைய இலைகள், வேர், காய் என அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் நிறைந்தவை.  என்னுடைய காய் மற்றும் இலையில் வைட்டமின் "சி' அதிகமாக உள்ளது.  என்னுடைய இலையில் அதிக அளவில் இரும்புச் சத்து உள்ளதால் நான் உங்களின் இரத்த சோகையைத் தீர்த்து, உங்கள் உடலை வலு பெற வைப்பேன்.  உங்கள் இரத்தம் சுத்தமடையும். மெலிந்த தேகம் உள்ளவர்கள் வாரமிருமுறை என்னுடைய கீரையை சமைத்து உண்டால்  உடம்பு வலுவடையும். என்னுடைய இலையின் சாறு விக்கலைப் போக்கும்.  நான் வயிற்றுப் புண்ணையும், அஜீரண கோளாறுகளையும், மலச்சிக்கலையும் போக்குவேன்.  என்னுடைய பூக்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் கலந்து அருந்தினால்  உடல் வலுவடைந்து நரம்புகள் புத்துணர்வுப் பெறும். 

என்னுடைய பயன்பாட்டை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளார்கள். பழங்காலத்தில் அரசர்கள் வீரர்களுக்கு முருங்கை கீரையை உணவாகக் கொடுத்து வந்தனர்.  அதனால் அவர்கள் பலமுடன் போர் புரிந்தனர் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

மனிதர்களின்றி மரங்கள் இருக்கும் ஆனால் மரங்களின்றி மனிதர்கள் இல்லை
(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com