அருள்!

அருள்!

என் பெயர் ராமு. வர சித்தி விநாயகர் கோயில் பக்கத்தில் கணேஷ் அண்டு கோ ஒரு அலுவலகத்தில் அக்கவுண்ட்ஸில் வேலை செய்கிறேன்.

என் பெயர் ராமு. வர சித்தி விநாயகர் கோயில் பக்கத்தில் கணேஷ் அண்டு கோ ஒரு அலுவலகத்தில் அக்கவுண்ட்ஸில் வேலை செய்கிறேன். அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று போன் வந்தது. இருப்புக் கொள்ளவில்லை. நான் கையில் காசின்றி இருப்பது அம்மாவுக்குத் தெரியாது... இந்த மாதிரி சமயங்களில் என் நண்பன் செல்வம்தான் உதவி செய்வான்....செல்வம் என் பக்கத்து சீட்....என் முகம் வாடியிருந்தால்கூட அவனுக்குப் பிடிக்காது....
""என்னப்பா என்ன ஆச்சு?''
""அம்மாவுக்கு உடம்பு சரியில்லே...போன் வந்தது....அதான்!''
""சரி, இந்தா எங்கிட்டே 300 ரூபாய் இருக்கு...இந்தா! போய் அம்மாவைப் பார்!...''
நன்றிப் பெருக்குடன் வாஙகிக்கொண்டு 
ஆபீஸýக்கு ரெண்டு நாள் லீவையும் போட்டுவிட்டுக் கிளம்பினேன். இன்று கிருஷ்ண ஜெயந்தி!.... அருகிலிருக்கும் வரசித்தி விநாயகரை தரிசனம் செய்துவிட்டு சீக்கிரமாக வீட்டுக்குக் கிளம்ப வேண்டும்....கோயில் அலங்காரத்துடன் இருந்தது....அம்மாவுக்கு உடம்பு சரியாப் போகணும்!.... டாக்டருக்கும், மருந்துக்கும் எவ்வளவு ஆகுமோ!...இருக்கும் ரூபாயில் உண்டியிலோ தட்டிலோ தைரியமாக காசு போடும் நிலைமையில் நான் இல்லை....
................
""ரமா, ஒரு உபகாரம் செய்வியா....'' 
"" என்னம்மா?...''
""சாயங்காலம் நம்ம வர சித்தி விநாயகர் கோயிலுக்குப் போய் பாட்டியோட பேருக்கு பிள்ளையாருக்கு ஒரு அர்ச்சனையும், கிருஷ்ணருக்கு ஒரு அர்ச்சனையும் செஞ்சுடு! பாட்டிக்கு ரொம்ப உடம்பு சரியில்லே.....ஒரு வாரம் முன்னாடி வேண்டிக்கிட்டிருந்தேன்....இந்தா,...நூறு ரூபாய்!....சாயங்காலம் செஞ்சாப் போதும்....எனக்கு நிறைய வேலை இருக்கு...சீடை முறுக்கெல்லாம் பிழியணும்!... கோலம் போடணும், மாவிலைத் தோரணம் கட்டணும், பூ கட்டணும், அப்பாவுக்கு லீவெல்லாம் கிடையாது அவரு சாயங்காலம் வர்றதுக்குளலே பூஜைப் பாத்திரங்கள் எல்லாம் ரெடி பண்ணி வைக்கணும்...''
""இதென்ன பிரமாதம்!....செய்யறேன்மா!.... 4 மணிக்கு கோயில் திறந்துடுவாங்க....பக்கத்திலேதானே இருக்கு! பாட்டிக்கு உடம்பு சரியாப் போகணும்...எவ்வளவு உப்புச் சீடை, வெல்லச் சீடை, முறுக்கெல்லாம் பிழியுவாங்க......கோவிலிலேயிருந்து வந்த உடனே உனக்கு கோலம் போட உதவி செய்யறேன்மா...'' 
கோவில் சற்று தூரத்தில் இருந்தது. தேங்காய், பழங்கள், ஊதுபத்தி, கற்பூரம், வெற்றிலை பாக்கு அடங்கிய ரெண்டு அர்ச்சனைத் தட்டுக்களை வாங்கிக்கொண்டாள் ரமா. 
......
நான் வரசித்தி விநாயகர் முன்னால் நின்றுகொண்டு அம்மாவுக்காக மனமுருக வேண்டிக்கொண்டிருந்தேன்....
......
அர்ச்சகரிடம் ஒரு தட்டைக் கொடுத்தாள் ரமா. ரமாவை குருக்களுக்கு நன்றாகத் தெரியும்...
""ரமா, என்ன அம்மா வரலையா?''
""இல்லே, அவங்களுக்கு வீட்டிலே நிறைய வேலை இருக்கு....பாட்டிக்கு உடம்பு சரியில்லே...பிள்ளையாருக்கும், கிருஷ்ணருக்கும் ஒரு அர்ச்சனை செய்யணும்...அம்மா வேண்டிக்கிட்டாங்களாம்...
""சரி (தட்டை நீட்டி) பெயர் நட்சத்திரம் சொல்லும்மா...''
""விசாலாட்சி....ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி.....''
.......
நான் ஆச்சரியத்தோடு அந்தச் சின்னப் பெண்ணைப் பார்த்தேன்!....என் கண்களில் நீர்!....இதற்குப் பெயர்தான் அருளா? என் அம்மாவின் பெயரும் விசாலாட்சி!....ரோகிணி நட்சத்திரம்......ரிஷப ராசி!.... மனதிற்குள் அம்மாவிற்கு உடம்பு சரியாகிவிடும் என்று நம்பிக்கை ஏற்பட்டது!
நான் வீட்டிற்குச் சென்றபோது அம்மா சித்தியுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள்! மிக உற்சாகமாக எனக்கு முறுக்கு சீடைகளை எடுத்து வந்தாள்...
.......
வீட்டை அடைந்தபோது ரமாவின் பாட்டி சீடையை உற்சாகமாக உருட்டிக் கொண்டிருந்தாள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com