பன்முகப் பெண்மணி!

டெல்லி கணேஷ் என்றும் பாம்பே ஜெயஸ்ரீ என்றும் சிலர் தம் பெயரின் முன்னால் தங்கள் ஊரின் பெயரை அடையாளம் ஆக்கிக் கொள்வார்கள். புவனேஸ்வரி சற்று வித்தியாசமானவர், தம் ஊரின் பெயருக்குப் பதிலாக தன் உழைப்பின் ஞாப
பன்முகப் பெண்மணி!

டெல்லி கணேஷ் என்றும் பாம்பே ஜெயஸ்ரீ என்றும் சிலர் தம் பெயரின் முன்னால் தங்கள் ஊரின் பெயரை அடையாளம் ஆக்கிக் கொள்வார்கள். புவனேஸ்வரி சற்று வித்தியாசமானவர், தம் ஊரின் பெயருக்குப் பதிலாக தன் உழைப்பின் ஞாபகமாக அடைமொழி சேர்த்துக் கொண்டவர். காம்கேர் புவனேஸ்வரி என்பதுதான் இவருக்கு நாமகரணம். அப்படிச் சொன்னால்தான் சென்னை ஆதம்பாக்கம் மக்களுக்கு சட்டெனத் தெரியும். பிரபல ஜாம்பவான்கள் கோலோச்சி வரும் மென்பொருள் துறையில் பல அரிய சாதனைகளைப் புரிந்து வருகிறார் புவனேஸ்வரி.

கணினி படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் சொந்தமாக சாஃப்ட்வேர் நிறுவனத்தை நடத்துகிறார். பல்வேறு நிறுவனங்களுக்கு வெப் டிசைனிங் செய்து தருவதுதான் இவருடைய நிறுவனத்தின் முக்கிய பங்கு. பல நிறுவனங்களுக்கு அந்தந்த நிறுவனங்களுக்கே உரிய பிரத்யேக மென்பொருள்களை வடிவமைத்துத் தருவதும் இவருடைய முக்கியப் பணியாக இருக்கிறது.

  குழந்தைகள், மாணவர்கள் மகிழும் வகையில் கார்ட்டூன்- அனிமேஷன் சி.டி.கள் தயாரிப்பிலும் இவர் பல சாதனைகளைச் செய்திருக்கிறார். குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பாவின் பாடல்களைப் பேரன் பேத்தி பாடல்கள் என்ற குறுந்தகடு பலருடைய பாராட்டுகளைப் பெற்றது.

  மைசூர் பல்கலைக் கழகத்தின் மல்டி மீடியா ரிசர்ச் சென்டருடன் இணைந்து பாடப் புத்தகங்களுக்காக மல்டி மீடியா சி.டி.கள் வெளியிட்டிருப்பது இவருடைய சாதனையின் மைல்கல்.

  இதுவரை 700க்கும் அதிகமான மல்டி மீடியா சி.டி.களை இவர் வெளியிட்டிருப்பதிலிருந்தே அவர் செய்திருக்கும் மகத்தான செயலை அறிந்து கொள்ள முடியும்.

  எளிய முறையில் கம்ப்யூட்டர் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் ஜெயா டி.வி.யில் நிகழ்ச்சி நடத்திவருகிறார். தமிழ் மூலம் வீட்டுப் பெண்களும் கம்ப்யூட்டரைப் புரிந்து கொள்ளும் வகையில் அவர் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

  இது மட்டுமன்றி குறும்படத் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் புத்தகப் பதிப்பாளராகவும் எழுத்தாளராகவும் இவருடைய முகங்கள் பரிணமிக்கின்றன. தம் தாய் தந்தையர் பெயரில் ஸ்ரீ பத்ம கிரிஷ் என்ற அறக்கட்டளைத் துவங்கி பல சமுதாய சேவைகளும் செய்து வருகிறார்.

   ஜெயந்தி நாகராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com