அகநானூற்றில் "அல்பினிசம்'

உறையூர் மருத்துவன் தாமோதரனார் எழுதிய அகநானூற்றுப் பாலைத்திணையைச் சார்ந்த பாடல் ஒன்று தலைமகனைப் பிரிந்த தலைமகள் தோழிக்குத் தலைவன் செல்லும் காட்டுவழியானது எத்தகையது என்பதை
அகநானூற்றில் "அல்பினிசம்'

உறையூர் மருத்துவன் தாமோதரனார் எழுதிய அகநானூற்றுப் பாலைத்திணையைச் சார்ந்த பாடல் ஒன்று தலைமகனைப் பிரிந்த தலைமகள் தோழிக்குத் தலைவன் செல்லும் காட்டுவழியானது எத்தகையது என்பதை விளக்குவதாக அமைந்துள்ளது.
குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர்,
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப,
கார் தலைமணந்த பைம் புதற் புறவின்,
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில்,
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ,
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று
வான் கொள் தூவல் வளி தர உண்கும்;
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக்
கொன் ஒன்று வினவினர்மன்னே தோழி!
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி
கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம்
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த
வரி மரற் கறிக்கும் மடப் பிணைத்
திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே' (133)

இப்பாடலானது அறிவியல் ஆய்விற்கு உட்பட்டதாக அமைந்துள்ளது. குன்றிமணியினைப் போன்ற கண்களையும், குறுகுறுத்த மயிர்கள் மற்றும் குறுகிய கால்களையும் உடைய வெள்ளெலி, மேகம் தவழும் குறும்பாறைகள், யானைக்கூட்டம் போன்ற காயாம் பூக்கள் மற்றும் எரியும் தீயைப்போன்ற இலவம் பூக்கள், காடைப்பறவையின் சிறகுமுள் போன்ற வெட்சிப்பூக்கள், கொல்லையில் பூக்கும் குருந்தம் பூக்கள், கொட்டிக்கிடக்கும் காடு அது.
நீர் ஒட்டா, அந்நிலத்தில் மரல்-நீரைப் பருக ஓடும் பெண்மானைத் தொடர்ந்து ஆண்மான் ஓடும் அக்காட்டின் வழியே தலைவன் செல்வதாகத் தோழியிடம் தலைவி கூறுகிறாள்.
உயிரிகளை உவமமாகவும் உருவகமாகவும் மிகுதியாகக் கொண்ட இப்பாடலின் முதல் உயிரியாகக் கூறப்பட்ட வெள்ளெலி செய்தியானது இங்கு சிறப்பிடம் பெறுவதாக அமைந்துள்ளது. இன்றைய தினம் ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் சுண்டெலியான
"மஸ்' (ஙன்ள்) பேரினத்தினைச் சார்ந்த எலிகளைக் குறிப்பதாக அமைந்துள்ளது. வீடுகளில் காணப்படும் எலிகளும் ஆய்வகத்தில் ஆய்விற்காகப் பயன்படுத்தப்படும் எலிகளும் ஒரே சிற்றினத்தைச் சார்ந்தவை என்றபோதிலும், அக மற்றும் புறக்கலப்பின் மூலம் பல்வேறுவகையான சுண்டெலிகள் ஆய்விற்காகத் தோற்றுவிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய எலிகளின் ஆய்வகப் பயன்பாடு 16ஆம் நூற்றாண்டில்தான் ஆரம்பித்தது. ஆனால்,
இப்பாடலோ காலத்தினால் முற்பட்டது. எனவே பாடலில் கூறப்பட்ட வெள்ளெலியானது "அல்பினோ' (ஹப்க்ஷண்ய்ர்) வகையினைக் குறிப்பதாகும். வெள்ளை மயில், வெள்ளை காகம், வெள்ளைப் புலி வகையைச் சார்ந்த வெள்ளெலியானது மரபணுவுடன் தொடர்புடைய பிறவிக்குறைபாட்டினால் தோன்றியதாகும். இதுபோன்ற அல்பினோ உயிரிகளில் நிறமிகள் இல்லாததால் அவை வெண்மையாகக் காணப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com