அறிய வேண்டிய அரிய சாசனம்

சிதம்பரத்தில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது காட்டு மன்னார்கோயில். இக்கோயிலிலிருந்து ஆறு கி.மீ.தூரத்தில் உள்ளது கடம்பூர்.
அறிய வேண்டிய அரிய சாசனம்

சிதம்பரத்தில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது காட்டு மன்னார்கோயில். இக்கோயிலிலிருந்து ஆறு கி.மீ.தூரத்தில் உள்ளது கடம்பூர். இந்த ஊரிலுள்ள சம்புவராயர் மாளிகையில் ஆதித்த கரிகாலன் தங்கியிருந்தபோதுதான் பகைவரால் கொல்லப்படுகிறார் என்பது வரலாறு. பின்னர், உத்தமசோழன் ஆட்சிக்கு வருகிறார். அதன்பின்னர் ராஜராஜன் ஆட்சிக்கு வருகிறார். ராஜராஜன் ஆட்சிக்கு வந்தபின்பு தன் சகோதரன் ஆதித்த கரிகாலனின் கொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை அளிக்கிறார்.
ஆதித்த கரிகாலனைக் கொன்ற கொலையாளிகளுக்கு ராஜராஜன் அளித்த தண்டனை பற்றிய அரிய கல்வெட்டு சாசனம் ஒன்று காட்டுமன்னார்கோயில் அனந்தீஸ்வரர் சிவாலயத்தின் மேற்குப்புற அதிட்டானத்தில் சாசனம் உள்ளது. இக்கோயில் உள்ள பகுதி "உடையார்குடி' என வழங்கப்படுகிறது.
அந்தக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள வாசகங்கள் பின்வருமாறு:

""ஸ்வஸ்தி ஸ்ரீ கோராஜகேஸரிவர்ம்மர்க்கு யாண்டு
2வது வடகரை ப்ரமதேயம் ஸ்ரீ வீரநாரயணச்
சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிப்
பெருமக்களுக்கு சக்ரவர்த்தி ஸ்ரீ முகம்
பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச்
சோழனைக் கொன்று த்ரோஹிகளான சோம(ன்)...
(இவன்) றம்பி ரவிதாஸன பஞ்சவன் பரஹ்மாதிராஜனும்
இவன்றம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ ப்ரஹ்மதிராஜ்னும்
இவகள் தம்பிமாரும் இவகள் மக்களிதும்
இவர் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும்
(இவகள் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள்...) றமத்தம்
பேரப்பன்மாரிதும் இவகள் மக்களிதும்
இவகளுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிதும்
தாயோடப் பிறந்த மாமன்மாரிதும் இவகள்
உடப்பிறந்த பெண்களை வேட்டாரினவும் இவகள்
மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர்
(முறி)யும் நம்மாணைக் குரியவாறு கொட்டையூர் ப்ரஹ்ம
ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்ரசேகர
பட்டனையும் பெரத் தந்தோம் தாங்களும்
இவகள் கண்காணியோடும் இவகள் சொன்னவாறு
நம்மாணைக்குரியவாறு குடியொடு குடிபேறும் விலைக்கு
விற்றுத் தாலத்திடுக இவை குறு(காடி)கிழான்
எழுத்தென்று இப்பரிசு வர''

மேலும், ராஜராஜ சோழன் அரியணை ஏறிய இரண்டாவது ஆண்டில், உடையார் குடிக்கு ராஜராஜன் செல்லாமல், அவரின் ஸ்ரீமுகம் மட்டும் அனுப்பி தண்டனையை நிறைவேற்றச் சொல்லியிருக்கிறார்.

"'வீர நாராயணன் சதுர்வேதி மங்கலத்து பெருமக்களுக்கு சக்ரவர்தியில் ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்ற துரோகிகளான சோமன் இவன் தம்பி ரவிதாஸன, பஞ்சவன், பரஹ்மாதிராஜனும் இவன் தம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ ப்ரஹ்மதிராஜனும் இவர்கள் தம்பிமாரும், பிள்ளைகளும் இவர்களுக்கு பெண் கொடுத்தவர்களும் பெண்களும் இவர்கள் சம்பந்தமுடைய அனைவரும் அவர்களின் உடைமைகள், சொத்து அனைத்தையும் விட்டுவிட்டு உடனே இந்த ஊரை காலிசெய்து வெளியேற - வேண்டும்''

என்ற பொருளில் இக்கல்வெட்டு சாசனம் எழுதப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com