பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அறஞ் செய்கின்ற ஒருவன், புகழினைப் பெறுவான். இவ்வுலகினின்றும் நீங்கி, மறுமை யுலகத்தின்கண் சென்றானாயின், அவ்வுலகமும் இனிதாக ஆகும்.

ஈனுலகத் தாயின் இசைபெறூஉம் அஃதிறந்
தேனுலகத் தாயின் இனிததூஉம் } தானொருவன்
நாள்வாயும் நல்லறஞ் செய்வாற் கிரண்டுலகும்
வேள்வாய் கவட்டை நெறி. (பாடல்}6)

அறஞ் செய்கின்ற ஒருவன், புகழினைப் பெறுவான். இவ்வுலகினின்றும் நீங்கி, மறுமை யுலகத்தின்கண் சென்றானாயின், அவ்வுலகமும் இனிதாக ஆகும். (ஆதலின்), நாள்தோறும் நன்மையைப் பயக்கும் அறங்களைச் செய்கின்றவனுக்கு, இரண்டுலகி னின்பமும் கவட்டை நெறியின்கண் உளவாகிய கலியாணங்களைப் போலும். (க}து) இம்மை } மறுமை இன்பங்களை அறம் எய்துவித்தலால், அதனை நாள்தோறும் செய்க.

" வேள்வாய் கவட்டை நெறி' என்பது இதில் வந்துள்ள பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com