கொள்கையில் உறுதி

நின்றவர்கள், பசி நோய் வந்துற்றதாக அதன் பொருட்டுத் தானே வந்துற்ற புலாலை உண்ணுதல், கடலினை நீந்திக் கன்றினது குளம்படி

பழமொழி நானூறு
விடலரிய துப்புடைய வேட்கையை
 நீக்கிப் படர்வரிய நன்னெறிக்கண் நின்றார் - இடருடைத்தாப்
 பெற்ற விடக்கு நுகர்தல் கடனீந்திக்
 கற்றடியு ளாழ்ந்து விடல். (பாடல்-26)
 விடுதற்கரிய வலிமை உடைய பற்றினை, முற்ற அறுத்து, ஒழுகுதற்கரிய நல்ல துறவற நெறியின்கண்
 நின்றவர்கள், பசி நோய் வந்துற்றதாக அதன் பொருட்டுத் தானே வந்துற்ற புலாலை உண்ணுதல், கடலினை நீந்திக் கன்றினது குளம்படி நீரினுள் அமிழ்ந்துவிடுவதை யொக்கும். (க-து.) துறவற நெறியில் நின்றார்
 எக்காலத்தும் புலால் உண்ணல் ஆகாதாம். "கடனீந்திக் கற்றடியு ளாழ்ந்துவிடல்' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com