திரிகடுகம் நல்லாதனார்

கற்றறிந்த அறிஞர்களை விட்டு நீங்கி (கீழ்மக்களோடு கூடி) வாழ்பவனும்; தான் விரும்பியவற்றைத் தான் விரும்பியவாறே புரிந்து நடக்கின்ற அறிவில்லாதவனும்
திரிகடுகம் நல்லாதனார்

கற்றாரைக் கைவிட்டு வாழ்தலுங் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் - முட்டின்றி
அல்லவை செய்யு மலவலையு மிம்மூவர்
நல்லுலகஞ் சேரா தவர். (பாடல்-99)


கற்றறிந்த அறிஞர்களை விட்டு நீங்கி (கீழ்மக்களோடு கூடி) வாழ்பவனும்; தான் விரும்பியவற்றைத் தான் விரும்பியவாறே புரிந்து நடக்கின்ற அறிவில்லாதவனும்; யாதொரு தடையுமில்லாது தீமையானவற்றைச் செய்கின்ற கீழ்மகனும் ஆகிய இந்த மூவரும் நன்மை அமைந்த மேலுலகத்தை அடையாதவராவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com