திரிகடுகம் நல்லாதனார்

(தன் வடிவு) கண்டோரால் இகழப்படும் முறைமையை உடையதாகவும்;
திரிகடுகம் நல்லாதனார்

எள்ளப் படுமரபிற் றாகலு முள்பொருளைக்
கேட்டு மறவாத கூர்மையு முட்டின்றி
உள்பொருள் சொல்லு முணர்ச்சியு மிம்மூன்றும்
ஒள்ளிய வொற்றாள் குணம். (பாடல்-85)


(தன் வடிவு) கண்டோரால் இகழப்படும் முறைமையை உடையதாகவும்; உண்மைப் பொருளை தானே கேட்டு அதனை மறத்தல் இல்லாக் கூரிய அறிவுடைமையும்; குறைவில்லாமல் முன்கேட்ட உண்மைப்பொருளை தன் தலைவனிடத்துச் சொல்லும் அறிவுடைமையும் ஆகிய இந்த மூன்றும் ஒண்மையுடைய ஒற்றனின் பண்புகளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com