திரிகடுகம் நல்லாதனார்

உயிர்கள் மாட்டுத் தனக்குள்ள அன்பாகிய பெரிய தளை கட்டுந் தளர்ந்து நீங்குதலும்;  கல்வியாகிய பெரிய தெப்பத்தை பொருள் மீது உண்டான ஆசையால் கைவிடுதலும்
திரிகடுகம் நல்லாதனார்

அற்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல்
கற்புப் பெரும்புணை காதலிற் கைவிடுதல்
நட்பி னயநீர்மை நீங்க லிவை மூன்றும்
குற்றந் தரூஉம் பகை. (பாடல்-86)

உயிர்கள் மாட்டுத் தனக்குள்ள அன்பாகிய பெரிய தளை கட்டுந் தளர்ந்து நீங்குதலும்;  கல்வியாகிய பெரிய தெப்பத்தை பொருள் மீது உண்டான ஆசையால் கைவிடுதலும்; நட்புப்  பூண்டொழுகுங்கால் அதற்குரிய நல்ல தன்மையினின்றும் நீங்குதலும் ஆகிய இவை மூன்றும் தனக்குக் குற்றத்தைத் தரும் பகைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com