கோலும் கோமானும்

உலகின் மூத்த மொழிகளுள் ஒன்று தமிழ். தொடக்கத்தில் மனிதச் சமூகம் ஒரே இடத்தில் வாழத் தொடங்கிப் பின்னர் இடம் பெயர்ந்திருக்க வேண்டும்.
கோலும் கோமானும்

உலகின் மூத்த மொழிகளுள் ஒன்று தமிழ். தொடக்கத்தில் மனிதச் சமூகம் ஒரே இடத்தில் வாழத் தொடங்கிப் பின்னர் இடம் பெயர்ந்திருக்க வேண்டும். இப்படி எண்ணுவதற்கு மொழியும் ஒரு காரணியாக இருக்கிறது. மொழிகளுக்கிடையே உள்ள சில ஒற்றுமைக் கூறுகள், பண்பாட்டு முறைகள் இச்சிந்தனையை வலுப்படுத்துகின்றன.
உழவுத் தொழில் உருவாவதற்கு முன் ஆக்களும் ஆடுகளும் வாழ்வாதாரச் செல்வமாக இருந்துள்ளன. அரசியல் உருவானதும் இதே காலகட்டமாகவே இருக்க வேண்டும். மொழி இந்தக் கருத்துக்கும் அரணாய் விளங்குகிறது.
தமிழில் முதலொலி ஆ (அ-குறில், ஆ-நெடில்). ஆயர் வாழ்வே நாகரிகத்தின் தொடக்கம் என்பதால் இவ்வெழுத்தே மொழியில் முதல் எழுத்தாக அமைந்துள்ளது எனலாம். உலகம் முழுதும் "ஆ' என்னும் எழுத்தே முதல் எழுத்தாகவும் அமைந்துள்ளது, பல மொழிகளிலும் "ஆ' என்னும் எழுத்து பசுவை அல்லது காளையைக் குறிப்பதாகவே உள்ளது.
எபிரேய மொழியில் (ஏஉஆதஉர) முதல் எழுத்து அகஉடஏ என்பதாகும். காளை அல்லது பசு என்பது இதன் பொருள். அரேபிய மொழியில் முதல் எழுத்தான அகஐஊ காளையைக் குறிக்கும். ஆ அல்லது அ என்னும் எழுத்து உருவானமுறை இதனைத் தெளிவுபடுத்தும். இன்று எழுதப்படும் அ என்னும் ஆங்கில எழுத்தின் தோற்றம் காளை அல்லது பசுவின் உருவத்திலிருந்து தோன்றியது. தமிழ்ப் பிராமியிலும் என்றே எழுதப்பட்டது. அதன் வடிவ மாற்றமே இன்று "ஆ' என்பதாக எழுதப்படுகிறது.
இன்றைக்கும் இந்த வடிவத்தை நாம் முழுமையாக இழந்துவிடவில்லை. தமிழகத்தில் செத்தவரை என்னும் பகுதியில் உள்ளோர் தமிழ்ப் பிராமியில் ஆ என்று எழுதியது போன்ற குறியினைத் (இருமுனைச் சூலம்) தங்கள் வீட்டு முகப்பில் இருபுறமும் எழுதி வைக்கின்றனர். பீகாரில் உள்ள பழங்குடியினர்களானசாந்தாலியர்கள் இதேபோன்ற குறியீட்டினை வரைந்து வைத்துள்ளனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். செஞ்சி அருகில் உள்ள நெகலூர்ப்பட்டியில் ஒவ்வோர் ஆண்டும் மாட்டுப் பொங்கல் அன்று இப்படி வரைவார்கள் என்றும் குறிக்கின்றனர்.
(குறியீடுகள் : )

இடை என்னும் சொல் பசுவையும் குறிக்கும். பசுக்களை மேய்ப்பவர்கள் இடையர் எனப்பட்டனர். பிற்காலத்தில் ஆடு மேய்ப்பவர்களும் இடையர் என்றே அழைக்கப்பட்டனர். ஆங்கிலத்தில் ஏங்ழ்க் என்று வழங்கப்படும் சொல், தொல் ஜெர்மானிய சொல்லான "எர்தோ' என்னும் சொல்லிலிருந்து தோன்றியிருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தமிழில் உள்ள "இடை' என்னும் சொல்லிலிருந்து உருவாகியிருக்கலாம். ஆடு, மாடுகளை உந்தித்தள்ளி மேய்ப்பதற்கு வழிநடத்த உதவும் சிறு கொம்பினைக் கோடு (எர்ஹக்) என்று ஆங்கிலத்தில் சொல்வர். கொம்பு எனப்படும் கோடு என்னும் சொல், ஆங்கிலத்தில் எர்ஹக் என்பதாகப் புழங்குகிறது. ஆநிரையைக் குறிக்கும் இஅபபகஉ என்னும் சொல், இஅபஉக என்னும் சொல்லடியிலிருந்து உருவானது. இஅபஉக என்பதற்குச் சொத்து, ஆநிரை என்று பொருள். ஆநிரையினைக் கொட்டிலில் அடைத்து வைப்பது வழக்கம். ஆங்கிலத்தில் இஞபஉ என்றே வழங்குவதனையும் நோக்கலாம். கட்டணம் எனப்படும் ஊஉஉ என்னும் சொல்லும் ஊஉஞஏ என்னும் சொல்லடியிலிருந்து உருவானது. ஊஉஞஏ என்றால் ஆநிரை. பால் சொரியும் பசுவை, சுரபி என்று வடமொழியில் வழங்குவர். சொரிதல்-சுரத்தல்-சுரபி என்று உருவாகியிருக்க வாய்ப்புண்டு.
டஅநபமதஉ என்றால் மேய்ச்சல் நிலம். பசிய நிலம் (புல்வெளி) என்னும் சொல்லே வேர்ச்சொல்லாய் இருக்க வேண்டும். பசிய நிலத்தில் மேய்வதனால் பசு என்று அழைத்தனர். பசு என்னும் சொல்லை ஆரியச் சிதைவு என்பார் நச்சினார்க்கினியர் (தொல். எழுத்து:75). "ஆதாயம்' என்னும் சொல் இலாபம், வருவாய் முதலான பொருளில் கையாளப்படுகிறது. தாயம் என்றால் உரிமை. ஆ+தாயம்= பசுவை உரிமையாகப் பெறுதல் என்னும் பொருளில் வழங்கப்படுகிறது எனலாம். ஆதாயம் வடமொழிச் சொல் என்றும் கூறுவர்.
அரசாட்சி முறையும் ஆயர்களிடமிருந்தே தொடங்கியிருக்க வேண்டும். "கோ' என்னும் சொல் பசுவையும், அரசனையும் குறிக்கும். "கோல்' என்னும் சொல்லடியிலிருந்து கோ, கோன், கோமான் என்னும் சொற்கள் தோன்றின.
மரத்தடியில் அமர்ந்து, ஆக்களை மேய்க்கப் பயன்படுத்தும் கோலினைக் கையில் பிடித்தபடியாகத் தன் கூட்டத்திற்குரிய கட்டளை பிறப்பித்து, கோல் கொண்டு நீதியை நிலைநாட்டிய தலைவனே கோன் ஆனான்; கோவன் ஆனான். அவனே "கோ' என்றும் அழைக்கப்பட்டான். வலிமை மிகுந்தவன் என்பதால் கோவலன் ஆனான். கோல்-கோன்-கோ என்று சொல் அமைவதைக் கவனித்தால் தெளிவு கிடைக்கும்.
ஆங்கிலத்திலும் ஆநிரை அல்லது விலங்குகளை முன்னே உந்தித்தள்ளப் பயன்படும் கோலுக்குக் கோடு (எஞஅஈ) என்றே பெயர். அரசனைக் குறிக்கும் கிங் (ஓஐசஎ) என்னும் சொல் கோ என்னும் தமிழ்ச் சொல்லடியிலிருந்து உருவாகியிருக்கலாம். (ஈன்ற்ஸ்ரீட் ந்ர்ய்ண்ய்ஞ், ஞப்க் சர்ழ்ள்ங் ந்ர்ய்ன்ய்ஞ்ழ், ஈஹய்ண்ள்ட் ந்ர்ய்ஞ்ங், ஞப்க் நஹஷ்ர்ய் ஹய்க் ஞப்க் ஏண்ஞ்ட் எங்ழ்ம்ஹய் ந்ன்ய்ண்ய்ஞ், ஙண்க்க்ப்ங் ஏண்ஞ்ட் எங்ழ்ம்ஹய் ந்ய்ண்ஸ்ரீ, எங்ழ்ம்ஹய் ஓய்ண்ஞ்). துருக்கியமொழிச் சொல்லான கான் (ஓஏஅச) என்னும் சொல்லும் அரசனைக் குறிக்கிறது. பாசிலியஸ் (ஆஹள்ண்ப்ண்ன்ள்) என்னும் பழங்கிரேக்கச் சொல் அரசனைக் குறிக்கும். அச்சொல்லுக்கு மூலம் எது என்று தெரியவில்லை என்பர். பசு என்பதே அதன் மூலம் என்றறியலாம்.
அரசன் உயர்ந்த இடத்தில் அமர்ந்து, கையில் கோல் வைத்திருப்பான் என்னும் குறியீடு, மருத நிலத்தில் வாழத் தொடங்கிய பின்னரும் தொடர்ந்து வந்தது. நாளடைவில் அரண்மனை எழுப்பிப் பேரரசனாக மாறிய பின்னரும் இதேமுறை தொடர்ந்தது. ஆயன் அமர்ந்த உயர்ந்த இடமே அரியணையானது. அவன் கையில் பிடித்திருந்த கோல் செங்கோலானது. மரக்கிளை(களே) கொற்றக்கொடையானது.
தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழுதும் இதே நிலைதான் இருந்தது. பழைய எகிப்திலும், கிரேக்கத்திலும் கூட ஆயர்களே ஆட்சிமுறையைக் கற்றுத்தந்தனர். எகிப்தில் உள்ள பழைய சிற்பங்களில் அரசன் உயர்ந்த இடத்தில் அமர்ந்தபடியாகக் கையில் ஆக்களுக்கு இலைதழைகளைப் பறிக்கப் பயன்படும் துறட்டியுடன் இருப்பது போன்ற காட்சிகளைக் காணமுடியும் (படங்கள்).
ஆங்கிலத்தில் அரசனை ரூலர் என்றழைப்பர். இந்தச் சொல் இலத்தீன் மொழிச் சொல்லான ரெகுலா - ரெகுலேர் (தங்ஞ்ன்ப்ஹ - தங்ஞ்ன்ப்ஹழ்ங்) என்னும் சொல்லடியிலிருந்து உருவானதாகும். ரெகுலா என்னும் சொல்லுக்கு "தடி' என்பதே நேரான பொருள். இன்றைக்கும் ரூலர் (தமகஉத) என்னும் சொல் சிறுகோலைக் குறிக்கும்.
தொன்மமாகச் சில கதைகள் இன்றும் செல்வாக்கோடு இருக்கின்றன. சிந்து சமவெளியில் கிடைத்துள்ள காளைச் சின்னம் தொடங்கி, இன்றுவரை நம் வாழ்வின் பல நிலைகளிலும் பண்பாட்டு விளக்கமாக "ஆ' விளங்குகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com