பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தக்காரோ டொன்றித் தமராய் ஒழுகினார்மிக்காரால் என்று சிறியாரைத் தாம்தேறார்கொக்கார் வளவய லூர! தினலாமோ

சிறியோர் சிறியோரே


தக்காரோ டொன்றித் தமராய் ஒழுகினார்
மிக்காரால் என்று சிறியாரைத் தாம்தேறார்
கொக்கார் வளவய லூர! தினலாமோ
அக்காரம் சேர்ந்த மணல். (பாடல்-18)


மீன் உண்ணும் கொக்குகள் நிறைந்திருக்கின்ற நீர்வளம் பெற்ற வயல்களை உடைய மருதநிலத் தலைவனே! சர்க்கரையோடு கலந்திருக்கின்ற மணலை, சர்க்கரையென்று கருதி உண்ணலாமோ; (அதுபோல்) தகுதி உடையாரோடு பொருந்தி அவர் உறவினரைப்போல் நெருங்கி ஒழுகினார் (ஆதலால்), குணத்தினால் மிக்கவர் என்று அறிவிற் சிறியாரை, பெரியோர்கள் தெரிந்து நட்புக் கொள்ளார். (க.து.) சிறியார் பெரியாரோடுஇணங்கியிருப்பினும் அவரோ டிணங்கார் அறிவுடையோர். 'தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல்' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com