இலக்கியத்தில் "தோசை'!

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற உணவு வகைகளுள் ஒன்று "தோசை'! தோசையில் பல வகை உண்டு. தோய்+செய்= தோசை ஆனது. தோய்தல் என்பது மாவு புளித்தலாம்.
இலக்கியத்தில் "தோசை'!

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற உணவு வகைகளுள் ஒன்று "தோசை'! தோசையில் பல வகை உண்டு. தோய்+செய்= தோசை ஆனது. தோய்தல் என்பது மாவு புளித்தலாம். தோசை பற்றிய செய்திகள் சில தமிழ் இலக்கியங்களில் பயின்று வந்துள்ளன.
கூளப்ப நாயக்கனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு சுப்ரதீபக் கவிராயர் என்பவர் பாடிய, "விறவி விடு தூது' என்னும் சிற்றிலக்கிய நூலில்,

"அப்பம் வடைசுகியன் தோசை
வகைபணி யாரம்
கடையிலே கொண்டு வகை கட்டி...' 

என்ற பாடல் வரிகளில் தோசை பற்றிய செய்தி காணப்படுகிறது. பிங்கல நிகண்டில்,

"அபூபம் கஞ்சம் இலையடை மெல்லடை
நொலையல் பூரிகை சஃகுல்லி போனகம்...'

என்ற வரிகள் காணப்படுகின்றன. இங்கு "கஞ்சம்' என்றால் தோசை எனப் பொருள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் தோசையை உணவில் பயன்படுத்தியுள்ளனர் எனத் தெள்ளிதின் உணர முடிகிறது. தனிப்பாடல் திரட்டில் பலகாரங்களின் பட்டியலில் தோசையும் இடம் பெற்றுள்ளது.

"தேன்குழல் அப்பம் தோசை இத்திய மாவுடலில்
திகழ்வடை அப்பளம் பணியாரங்கள் எலாம் நீத்தே
... .... ....
தண்பாலாய் அடைதல் எழில்தரு முறுக்கு தானே!'

கி.பி.1542ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் தோசை குறித்த சுவையான செய்தி உள்ளது. இக்கல்வெட்டு காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் உள்ளது. 
செங்கல்பட்டிலிருந்து சென்னைக்குச் செல்லும் வழியில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலில் மிளகு தோசை பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருவரங்கத்தின் அருகிலுள்ள குளத்தூர் (புதுக்கோட்டை அருகில்) ஸ்ரீவரதராசப் பெருமாள் கோயிலில் தீபாவளி நாளில் தோசையே பிரசாதமாக வழங்கப்படுகிறது. அழகர்கோயிலிலும், தமிழ் நாட்டில் வேறு சில கோயில்களிலும் தோசையே பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே, தமிழரின் பழங்கால உணவு முறைகளுள் தோசையும் முக்கிய இடம் வகித்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com