பலகாரங்கள் படைத்த பெரும் புலவர்

சேத்தூர் அரசவைப் புலவராகச் சிறப்புற மிளிர்ந்தவர் முகவூர் கந்தசாமிப் புலவர். இவர்தம் புதல்வரே புலவர் மீனாட்சிசுந்தரம்.
பலகாரங்கள் படைத்த பெரும் புலவர்

சேத்தூர் அரசவைப் புலவராகச் சிறப்புற மிளிர்ந்தவர் முகவூர் கந்தசாமிப் புலவர். இவர்தம் புதல்வரே புலவர் மீனாட்சிசுந்தரம். புலவர் மரபிலே வந்ததால் இயற்கையிலே இவர் கவிபாடும் ஆற்றல் கைவரப் பெற்றிருந்தார். இவர் இயற்றிய நூல்களும், தனிப்பாடல்களும் தனிச் சிறப்புடையவை.
 பின்னாளில் சேத்தூர் அரசவைப் புலவராகவும் திகழ்ந்தார். அப்போது அங்கிருந்த "காவடிச்சிந்து' இளங்கவி அண்ணாமலையுடன் நெருங்கிப் பழகி நட்புறவு பூண்டொழுகினார். அவருக்கு ஆசானாகவும் அமைந்து நூல்கள் பல கற்பித்த சான்றோர் இவர்.
 ÷எட்டயபுரம் ஜமீனின் 87-ஆவது வாரிசாக அமைந்து அதனைக் கோலோச்சிய பெருமைக்குரியவர் ஜமீன்தார் வெங்கடேச எட்டப்ப நாயக்கர். தமிழ், தெலுங்கு, வடமொழி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் நன்கு புலமைமிக்கவர்; எண்ணற்ற புலவர்களையும், இசை வாணர்களையும், தம் அரசவையில் அமர்த்தி அழகு பார்த்தவர்.
 ÷மீனாட்சிசுந்தரக் கவிராயரின் கவித்துவ ஆளுமையினை விருப்பமுடன் செவிமடுத்த எட்டயபுரம் ஜமீன்தார், அவரைத் தம் அரசவைப் புலவராக ஏற்றுக் கொண்டார். ஜமீன்தார் இக்கவிராயர் மீது மட்டற்ற மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார்.
 ÷எட்டயபுரம் அரசவைப் புலவர் சங்கரநாராயண சாஸ்திரி இயற்றிய "குவலாயனந்தம்' எனும் வடமொழி அணியிலக்கண நூலை அதே பெயரில் மீனாட்சிசுந்தரக் கவிராயர் தமிழில் மொழி மாற்றம் செய்துள்ளார். மேலும், கழுகுமலைத் திரிபந்தாதி, கழுகுமலைப் பதிகம், முருகானுபூதி, திருப்பரங்கிரிப் பதிகங்கள் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
 ÷பெரும் இசை ஞானி சுப்புராம தீட்சதர் எழுதிய "சங்கீத சம்பிரதாய பிரகர்ணி' எனும் இசை நூலுக்குப் பொருளும் தந்து, தம் சொந்த அச்சகமான "வித்தியா விலாசிணி' மூலம் வெளியீடும் செய்தார். நாகூர் முத்துப் புலவர் இயற்றிய "இசைப்பள்ளு' எனும் நாடோடி இலக்கிய நூல் இவர்
 தம் அரசவையில் அரங்கேற்றம் செய்யப்பெற்றது.
 ÷ஒருமுறை ஜமீன்தாரின் பல்வேறு மேதமைகளைத் தமிழுலகுக்குப் பறைசாற்ற விருப்பமுற்ற மீனாட்சிசுந்தரக் கவிராயர் மாறுபட்ட கோணத்தில் அவர்மீது பா ஒன்றினைப் புனைந்தார்.
 
 
 ÷எப்புலவரும் இதுகாறும் கையாளாத புதுமை மிகு பல்வேறு பலகாரங்களின் பெயர்கள் அடுக்கடுக்காய் அமையுமாறு ஜமீன்தாரின் பெருமையினை இப்பாடல் வழி அற்புதமாக அலங்கரித்துள்ளார்.
 ÷இப்பாடலைச் செவிமடுத்த அவைக்களப் புலவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இவ்வரிய பாடலின் பொருள் நுட்பத்தினையும் சிருங்கார ரசத்தினையும் நன்கு ருசித்து, ரசித்த ஜமீன்தார் வியப்பில் மூழ்கினார். அப்புலவர் பெருமகனாருக்கு வேண்டிய பரிசில் தந்து மனம் நிறைவுற்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com