பிறரை நம்ப வேண்டாம் 

தம்மாட்டு அன்புடையாரிடத்தாயினும், ஆராய்தல் இலனாகித் தெளிந்தவன், அழிந்து விடுவான். எப்பொழுதும் வெகுண்டாரே போல இருந்து
பிறரை நம்ப வேண்டாம் 

பழமொழி நானூறு
விளிந்தாரே போலப் பிறராகி நிற்கும்
முளிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா
அளிந்தார்கண் ஆயினும் ஆராயா னாகித்
தெளிந்தான் விளிந்து விடும். (பாடல்-42)
தம்மாட்டு அன்புடையாரிடத்தாயினும், ஆராய்தல் இலனாகித் தெளிந்தவன், அழிந்து விடுவான். எப்பொழுதும் வெகுண்டாரே போல இருந்து, அன்பின்மையின் வேறாகி நிற்கும் ஈரமற்றாரை, (தேறவேண்டாம் என்று) உறுதியாகச் சொல்ல வேண்டுவதில்லை. (க-து.) தம்மாட்டு அன்புடையாரிடத்தே ஆராயாது தம் மறையை வெளியிட்டார் கெடுவர் என்றால், பிறரை நம்பலாகாது என்பது சொல்ல வேண்டா. "அளிந்தார்கண் ஆயினும்ஆராயானாகித் தெளிந்தான் விளிந்துவிடும்' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com