பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தன்னைத் தெளியாது செருக்கோடு ஒழுகுகின்ற திறப்பாடில்லாத பகைவரை, பொருள் கொண்டு கொல்லுதலே செய்யத்தக்க காரியம், (அப் பகைவரைக் கொல்லும் பொருட்டுச் சிலர்க்குப்) பொருளினைக் கொடுப்பின், அவரைக்
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தெருளா தொழுகும் திறனிலா தாரைப்
பொருளா லறுத்தல் பொருளே - பொருள்கொடுப்பின்
பாணித்து நிற்கிற்பார் யாருளரோ? வேல்குத்தின்
காணியின் குத்தே வலிது. (பாடல்-32)

தன்னைத் தெளியாது செருக்கோடு ஒழுகுகின்ற திறப்பாடில்லாத பகைவரை, பொருள் கொண்டு கொல்லுதலே செய்யத்தக்க காரியம், (அப் பகைவரைக் கொல்லும் பொருட்டுச் சிலர்க்குப்) பொருளினைக் கொடுப்பின், அவரைக் கொல்லாது தாமதித்து நிற்பார் யாவர் உளர்? வேலாற் குத்துதலைவிட, காணிப்
பொருளால் குத்துவதே வலிமை யுடையதாம். (க-து) பகைவரைப் பொருளாற் கோறலே சிறந்ததாதலின் பொருளினை மிகுதியுஞ் செய்க. "வேல்குத்தின் காணியின் குத்தே வலிது' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com