பழமொழி நானூறு

தாம் தம்மைச் செவ்வை செய்துகொள்ள முடியாதார், பாதுகாவலாகத் தம்மால் அடையப்பட்டாரை, தீயசொற்களால் பகைமையை உண்டாக்கி
பழமொழி நானூறு

தாமாற்ற கில்லாதார் தாஞ்சாரப் பட்டாரைத் 
தீமாற்றத் தாலே பகைப்படுத்திட் - டேமாப்ப 
முன்னோட்டுக் கொண்டு முரணஞ்சிப் போவாரே
உண்ணோட் டகலுடைப் பார். (பாடல்-28)


தாம் தம்மைச் செவ்வை செய்துகொள்ள முடியாதார், பாதுகாவலாகத் தம்மால் அடையப்பட்டாரை, தீயசொற்களால் பகைமையை உண்டாக்கி, எதிர்த்து நிற்கவும் பயந்து, சேமமாக, முன் ஓடுதலை மேற்கொண்டு செல்பவர்கள், தாம் உண்கின்ற ஓடாகிய உண்கலத்தை உடைப்பாரோடு ஒப்பர். (க-து.) தம்மால் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள இயலாதார் தமக்குச் சார்பானவரைச் சினந்து கூறாதொழிக. "உண்ணோட் டகலுடைப்பார்' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com