கட்டளைக்கல் சுடாத செங்கல் தானா?

ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழ்ப் பேரிலக்கியங்கள் பழந்தமிழ்ப் பண்பாட்டுக் கருவூலங்கள். அவற்றுள் ஒன்றான மதுரைக் காஞ்சி தமிழ் நாட்டுத் தொழில் வல்லுநர்கள் பற்றிய பட்டியலில் "சூடுறுநன் பொன் சுடரிழை புன
கட்டளைக்கல் சுடாத செங்கல் தானா?


ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழ்ப் பேரிலக்கியங்கள் பழந்தமிழ்ப் பண்பாட்டுக் கருவூலங்கள். அவற்றுள் ஒன்றான மதுரைக் காஞ்சி தமிழ் நாட்டுத் தொழில் வல்லுநர்கள் பற்றிய பட்டியலில் "சூடுறுநன் பொன் சுடரிழை புனை நரையும், பொன் உரை காண்மரையும்' என்று குறிப்பிடுகின்றது. பொன்னின் தரத்தை உரைத்துக் காண்பதே மரபு. அதற்குப் பயன்பட்ட கல்லே உரைகல். அதனைக் கட்டளை என வழங்குவது இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் மரபு. 
கரிய நிறம் உடைய உழவர்குடிச் சிறுவர் "கண்பு' என்னும் தாவரத்தின் காயை ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாடிய பொழுது, அதன் மகரந்தத் துகள் படிந்த அவர்தம் உடம்பு பொன்னை உரைத்துப் பார்த்த கட்டளைக்கல் போல இருந்தது (பெரும்.220-21); நெல்லிக்காயை வட்டுக் காயாகப் பயன்படுத்திச் சிறுவர் விளையாடுவதற்குத் தரையில் கீறிய கட்டங்கள் கட்டளைக்கல் போல இருந்தன (நற்றிணை-3); கரிய குயிலின் மேல் மா மரத்தின் தாது படிந்தபோது, அக்குயில் பொன் உரை திகழும் மேனியுடையதாயிற்று (குறுந்-192); பொன் போன்ற புதுத் தினைக்கதிரை, கட்டளைக்கல் போன்ற கரிய உடலைக் கொண்ட பன்றி உண்டது (ஐங்குறு-263); நீலக்குரும் நிறம் கொண்ட தும்பி கட்டளைக் கல்போல ஒளிவிட்டது (ஐங்குறு-215). இங்ஙனம் சங்கத்தமிழ் கட்டளைக்கல் பற்றிப் பேசுகிறது.
திருவள்ளுவ நாயனார், அரசன் தன் பணியாளர்களின் தகுதியை ஆராய்வது பற்றிக் கூறும் அதிகாரத்தில்தான் "கட்டளைக்கல்' என்று மொழிகின்றார். 
"கட்டளைக்கல்' பற்றி எழுதிய கட்டுரையாளர் த.ஜெகதீசன், மணக்குடவர் உரையை மேற்கோள் காட்டி, "கட்டளைக்கல் என்பது சுட்ட செங்கல்' என நிறுவ முயன்றுள்ளார். மணக்குடவர் கருத்தையே பரிப்பெருமாளும் கூறியுள்ளார். இவ்விருவரும் சொல்லும் படிக்கல்லையும் கட்டுரையாளர் பிறழ உணர்ந்ததாகத் தெரிகிறது. 
தராசுப் படிக்கல் என்பது யாவருக்கும் தெரிந்தது. மதிப்பிடும் செயலை இன்றும் நாம் "எடைபோடுதல்' என்கிறோம். உரைத்துப் பார்த்தலும், நிறுத்துப் பார்த்தலும் தரத்தை முடிவு செய்யத்தான். 
இந்த விளக்கத்தை மகா மகோபாத்தியாயரின் அருமை மாணாக்கர் மகாவித்துவான் ச.தண்டபாணி தேசிகரும் சுட்டிக் காட்டியுள்ளார். நிறையறியும் படிக்கல், மாற்று அறியும் கல் என அவர் வேறுபடுத்திக் காட்டுவார். ஆங்கிலத்திலும் "பஞ ரஉஐஎஏ பஏஉ ரஞதபஏ' என்று கூறுவர். 
கட்டளைக் கலித்துறை என்றொரு யாப்பும் உண்டு. சில வரையறைகளை வகுத்து, இதுவே யாவரும் பின்பற்ற வேண்டும் என அரசு விதிப்பதும் கட்டளைதானே! நபஅசஈஅதஈ என்று ஆங்கிலத்தில் சொல்லலாம். இத்தகைய அச்சினை (செங்கல் அச்சினை) கட்டளை என்பர். அது அச்சுத்தான். அச்சில் உருவாக்கும் வேகாத கல்தான் சுட்டக்கல் என்று சொல்வது பொருத்தமற்ற விளக்கமாகவே கருதப்படும். 
நீலம், அகலம், பருமன் என்ற முப்பரிமாணத்தினையொட்டி செங்கல் அச்சு செய்யப்படும். இதனைத்தான் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி "கட்டளை' என்பதற்கு இப்பொருளையும் குறிப்பிட்டுள்ளது.
"தன்னைத்தான் உயர்த்திக் கொள்பவனும் தாழ்த்திக் கொள்பவனும் தானே' என்ற கருத்து, தெரிந்து தெளிதல் என்னும் அரசக் கடமைக்கு அன்றி, தனி மனிதனின் ஈடேற்றத்திற்கு உறவுடைய சிந்தனையேன்றி, உலகியல் வாழ்வுக்குரியதன்று.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com