பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

கற்றது ஒன்றில்லையாயினும், நற்குடிப்பிறந்தார் ஒன்றை மட்டும் அறிந்தாரைவிட நற்குணங்களில் மாட்சிமைப்பட மிகச் சிறந்தோர்களே யாவார்கள்.
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

கற்றதொன் றின்றி விடினும் குடிப்பிறந்தார்
மற்றொன் றறிவாரின் மாணமிக நல்லரால்
பொற்ப உரைப்பான் புகவேண்டா கொற்சேரித்
துன்னூசி விற்பவர் இல். (பாடல்-50)


கற்றது ஒன்றில்லையாயினும், நற்குடிப்பிறந்தார் ஒன்றை மட்டும் அறிந்தாரைவிட நற்குணங்களில் மாட்சிமைப்பட மிகச் சிறந்தோர்களே யாவார்கள். கற்றோர் அவர்களிடம் நற்குணங்களை அழகுபட விரித்துரைக்கப் புகவேண்டுவதில்லை. கருமாருடைய சேரியில் தையல் ஊசியை விற்கப் புகுவார்இல்லையாதலால். (க-து.) உயர்குடிப் பிறப்பின்றிக் கல்வி ஒன்றே உடையாரைவிட உயர்குடிப்பிறந்தார் சாலச் சிறந்தவர்களே யாவார்கள். "கொற்சேரித் துன்னூசி விற்பவர் இல்' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com