பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தேன் மிகுந்த அழகிய மாலையையும் மாட்சிமைப்பட்ட கலன்களையுமுடையாய்! ஆராய்ந்தால்,  புதிய மோரினைவிடப் பழைய நெய் தீது ஆவதில்லை.
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

சிறியவர் எய்திய செல்வத்தின் நாணப்
பெரியவர் நல்குரவு நன்றே - தெரியின்
மதுமயங்கு பூங்கோதை மாணிழாய்! மோரின்
முதுநெய்தீ(து) ஆகலோ இல்.. (பா-70)

தேன் மிகுந்த அழகிய மாலையையும் மாட்சிமைப்பட்ட கலன்களையுமுடையாய்! ஆராய்ந்தால்,  புதிய மோரினைவிடப் பழைய நெய் தீது ஆவதில்லை. (நன்மையே பயக்கும்).  அறிவிற் சிறியார் பெற்ற செல்வத்தைவிட,  அறிவுடையோர் எய்திய வறுமை மாட்சிமைப்பட நல்லதே யாகும். (க-து) அறிவிலார் பெற்ற செல்வத்தைவிட அறிவுடையோர் பெற்ற வறுமையே மிகச் சிறந்தது. "மோரின் முதுநெய் தீது ஆகலோ இல்' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com