இந்த வார கலாரசிகன்

எழுத்தாளர் சுதாங்கனுடன் எனக்கு ஏறத்தாழ 38 ஆண்டுகால அறிமுகம். சாவி குழுமத்திலிருந்து வெளிவந்த  இளைஞர்களின் இதழான திசைகளால் அறிமுகப்படுத்தப்பட்ட இளம் எழுத்தாளர்களில் உச்சத்தைத் தொட்டவரும்,
இந்த வார கலாரசிகன்

எழுத்தாளர் சுதாங்கனுடன் எனக்கு ஏறத்தாழ 38 ஆண்டுகால அறிமுகம். சாவி குழுமத்திலிருந்து வெளிவந்த  இளைஞர்களின் இதழான திசைகளால் அறிமுகப்படுத்தப்பட்ட இளம் எழுத்தாளர்களில் உச்சத்தைத் தொட்டவரும், இன்னும் குறிப்பிடத்தக்க எழுத்தாளராகத் தொடர்பவரும் அவர் மட்டுமே. திசைகள், குமுதம், ஜூனியர் விகடன், ஜெயா தொலைக்காட்சி என்று சுதாங்கனின் ஒவ்வொரு பத்திரிகை உலகப் பரிமாணத்தையும் சற்றுத் தள்ளியே இருந்து வியந்து பார்த்து மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன். 
அன்றைய மாம்பலம் உஸ்மான் சாலையின் அடையாளங்கள் பல இன்று காணாமல் போய்விட்டன.  உஸ்மான் சாலையில்  "நேஷனல் ஐஸ்கிரீம் பார்லர்' என்கிற கடையின் வாசலில், வருங்காலக் கனவுகளைச் சுமந்துகொண்டு, நிகழ்கால வறுமையை மறந்தபடி ஓர் இளைஞர் கூட்டம் மாலை வேளைகளில் கூடும். நடை
பாதைக்கும் சாலைக்கும் இடையே அமைக்கப்பட்டிருக்கும் கான்கிரீட் தடுப்புகளில் அமர்ந்துகொண்டு அன்றாட சினிமா, அரசியல், இலக்கியம் என்று ஒன்றையும் விட்டுவிடாமல் விவாதிக்கும் அந்த இளைஞர் கூட்டத்தில்  சுதாங்கனின் பங்களிப்பு சற்று அதிகமாகவே இருக்கும். 
சுதாங்கனின் 60 வயதையொட்டி பாரதிய வித்யா பவனில்,  அவர் எழுதிய நான்கு நூல்களை அல்லையன்ஸ் பதிப்பகம்   வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அறுபதில் நேரில் சென்று வாழ்த்தத் 
தவறிவிட்டேன். அகவை எண்பதில் அந்தக் குறையைத் தீர்க்க முடியும் என்று நம்புகிறேன். 

மலேசியாவிலிருந்து நண்பர் ராஜேந்திரன் தொலைபேசியில் அழைத்தார். டிசம்பர் 11-ஆம் தேதி எட்டயபுரத்தில் பாரதி
யார் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்த பயண ஏற்பாடுகள் குறித்து விசாரித்தார். 40 பேர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கி, அங்கிருந்து பேருந்தில் பயணிப்பதாகத் திட்டம் என்று தெரிவித்தார். மகிழ்ச்சியாக இருந்தது. இந்த ஆண்டு  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினரும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினரும், எல்லா தமிழ் அமைப்பு
களும் எட்டயபுரத்தில் பாரதியார் இல்லத்தில் கூடவேண்டும் என்கிற என்னுடைய வேண்டுகோளை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறேன்.
"மகாகவி பாரதி பற்றி சோவியத் அறிஞர்கள்' என்றொரு புத்தகம் 1982-இல் சோவியத் நாடு பிரசுரத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. மக்கள் கவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தின நூற்றாண்டு 
விழாவுக்கு சோவியத் தமிழ் அறிஞர்
களின் காணிக்கையாக  வெளியிடப்பட்டிருக்கும் அந்தப் புத்தகத்தில் சோவியத் அறிஞர்கள் ஒன்பது பேர் மகாகவி பாரதி பற்றிய  தங்களது கருத்துகளைப் பதிவு செய்திருக்கின்றனர்.  

ஆங்கில மகாகவி ஷெல்லியை "பிரஞ்சுப் புரட்சியின் குழந்தை' என்று குறிப்பிடுவதுபோல, தனது  பதின் பருவத்தில் தன்னை "ஷெல்லிதாசன்' என்று கூறிக்கொண்ட தேசிய மகாகவி சுப்பிரமணிய பாரதியை "ரஷ்யப் புரட்சியின் குழந்தை' என்று குறிப்பிடலாம் என்று தனது முன்னுரையில் தொ.மு.சி.ரகுநாதன் செய்திருக்கும் பதிவை மறுப்பதற்கில்லை. பாரதி 1906-இல் செப்டம்பர் மாதத்தில்  எழுதிய கட்டுரை ஒன்றில், சுயாதீனத்தின் பொருட்டும், கொடுங்கோன்மை நாசத்தின் பொருட்டும்  நமது ருஷ்யத் தோழர்கள் செய்துவரும் உத்தமமான முயற்சிகளுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். இந்திய விடுதலை இயக்கம் தேசிய இயக்கமாக மாறுவதற்கு ரஷ்யப் புரட்சி தூண்டுகோலாக இருந்ததை மறுப்பதற்கில்லை.

சோவியத் யூனியனில் பாரதியின் படைப்புகள் குறித்த ஆராய்ச்சி அறுபதாம் ஆண்டுகளிலேயே தொடங்கியிருந்தது என்பதும், பாரதி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்காக 1981-இல்  20 உறுப்பினர்கள் கொண்ட கமிட்டி ஒன்று மாஸ்கோவில் நிறுவப்பட்டது என்பதும் இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி. இந்தத் தொகுப்பில் காணப்படும் ஒவ்வொரு கட்டுரையும் தீவிரமான பாரதி ஆய்வின்  வெளிப்பாடுகள். 

இத்தொகுப்பின் மறுபதிப்பு பாரதியின் பிறந்த நாளன்று எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்தில் பாரதி அன்பர்கள் மத்தியில்  வெளியிடப்பட்டால்  எப்படி இருக்கும் என்று,  நானும் பாரதியைப் போலவே எனது கனவுக் குதிரையைத் தட்டிவிடுகிறேன்.  

புதுச்சேரியில் 1948-இல் பிறந்து, 1983-இல் கவிஞர் மீராவின் நவகவிதை வரிசையில்,  "அந்நியன்' கவிதை மூலமாக அறிமுகமானவர் கவிஞர் இந்திரன். 2011-இல் சாகித்ய அகாதெமியின் மொழிபெயர்ப்புக்கான விருதினைப் பெற்றவர். தமிழகத்தில் இன்றைய தலைசிறந்த கவிஞர் ஒருவராகவும், மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவராகவும் வலம்வரும் கவிஞர் இந்திரனின் "மேசை மேல் செத்த பூனை'  என்கிற எதிர் கவிதை ஒரு வித்தியாசமான தொகுப்பு. அது என்ன எதிர் கவிதை? ""மொழியின் சர்வாதிகாரத்தன்மையிலிருந்து கவிதையை விடுவிப்பது எதிர் கவிதை'' என்கிறார் கவிஞர் இந்திரன்.

""நகைச்சுவை, கிண்டல், கேலி என்று மொத்த மனித குலத்தையும் நக்கல் அடித்துக் கொள்வது நடைபெறுகிறபோது, கவிஞர் பாடுவதற்கு பதிலாக கதை 
சொல்லத் தொடங்கிறார் என்று அர்த்தம். இதுதான் எதிர் கவிதை'' என்கிறார் அவர்.
""கவிதைக்கென பிரத்யேகமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் போதை வார்த்தைகளை பிரக்ஞைபூர்வமாகத் தவிர்ப்பது அல்லது அவை கட்டமைக்கும் சீரியஸ்தனத்தைக் குலைப்பது; இயந்திர அழகியல் ஒன்றைத் தமிழில் நிர்மாணிப்பது; ஒரு பூவை ரசிப்பதைப் போல இயந்திரங்களையும் ரசிக்கத் தொடங்குவது; 

மரபார்ந்த ஐவகை நிலப் பாகுபாடுகளிலிருந்து தமிழை நகர்த்தி கிரகம் தழுவிய ஒரு புதிய பூகோளத்தைத் தமிழ்க் கவிதைப் பரப்புக்குள் கொண்டு வருவது;  புதிய நதிகள், பறவைகள், பனி மழை போன்றவற்றிற்கான புதிய திணை ஒழுக்கங்களை தமிழ்க் கவிதைப் பரப்புக்குள் உருவாக்குவது'' என்பவைதான் எதிர் 
கவிதையின் இலக்காக "மேசை மேல் செத்த பூனை' தொகுப்பின் பின் அட்டை தெரிவிக்கிறது.
"மேசை மேல் செத்த பூனை' தொகுப்பில் காணப்படும் 
"சாத்தானும் ஆப்பிளும்'  இன்றைய சமூகச் சூழலுக்குப் பொருத்தமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
ஏதன் தோட்டத்தில்
பிளவு பட்ட இரு நாவுகளைத்
துழாவித் துழாவி
ஏவாளிடம் பேசியது சாத்தான் பாம்பு.
விலக்கப்பட்ட கனியை ஏவாளுக்குக் கொடுத்து
மனித குலத்தை ஆசீர்வதித்தது.
இன்று
சுமக்க முடியாத வால்களைத்
தூக்கிக் கொண்டு அலைந்த
டைனோசர்கள்போல்
காதலைச் சுமந்து கொண்டு அலைகின்றனர்
ஆதாம் ஏவாள்களின் வாரிசுகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com