அபூர்வ சிவன்!

திருவெண்காடு திருத்தலத்தில் உள்ள சிவபெருமானின் வடிவம் "அகோரம்' எனப்படுவதாகும்.
அபூர்வ சிவன்!

திருவெண்காடு திருத்தலத்தில் உள்ள சிவபெருமானின் வடிவம் "அகோரம்' எனப்படுவதாகும். கரிய உருவமும் எட்டு கரங்களுடன் ஏழு ஆயுதங்களும் கொண்டு எரிசிகைகளுடன் நெற்றிக்கண் நெருப்பைக் கக்க, கம்பீரமான திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மருத்துவாசுரனை அழிக்க சிவபெருமான் அருளிய திருக்கோலம் இதுவாகும். இந்த உருவத்தில் சிவனை தரிசிப்பது மிகப்பெரிய பேறாகும். 

* மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று பெருமைகளிலும் சிறந்து விளங்கும் திருவெண்காட்டில் எல்லாமே மூன்றாக அமைந்துள்ளன. இத்தலத்திற்கு உரிய மூர்த்திகள் மூவர். சுவேதாரண்யேஸ்வரர், அகோர மூர்த்தி, நடராஜர்.

* குமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலய மூர்த்தி ஆலயத்தில் நவக்கிரகங்கள் ஸ்ரீ விநாயகர் சந்நிதிக்கு எதிரே உத்திரத்தில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளன! கீழே தீபம் ஏற்றுகிறார்கள்.

* திருநள்ளாரில் அறுபத்து மூவருக்கும் கடைசியில் தனித்த சிறிய மண்டபத்தில் கலி நீங்கிய நளன் உள்ளார். இத்தலத்திற்கு திருத்தலப் பெருமை உடையவன் ஆதலால் அறுபத்து மூவர் வரிசையில் இடம் பெறறுள்ளான்.

- ஆர்.கே. லிங்கேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com