பங்குனி பௌர்ணமி தீர்த்தம்!

திருவேங்கடவன் என்று போற்றப்படும் ஏழுமலையான் எழுந்தருளியுள்ள திருப்பதி- திருமலையில் பல புனிதத் தீர்த்தங்கள் உள்ளன. அதில் பங்குனி தீர்த்தமும் ஒன்று!
பங்குனி பௌர்ணமி தீர்த்தம்!

திருவேங்கடவன் என்று போற்றப்படும் ஏழுமலையான் எழுந்தருளியுள்ள திருப்பதி- திருமலையில் பல புனிதத் தீர்த்தங்கள் உள்ளன. அதில் பங்குனி தீர்த்தமும் ஒன்று!

சப்த முனிவர்களில் ஒருவரான வசிஷ்டர், ராமபிரானின் குலகுரு. இவரின் மனைவி அருந்ததி. இந்துமதத்தில் திருமணச் சடங்குகளில் "அருந்ததி' நட்சத்திரத்தைப் பார்ப்பது வழக்கம்.

இந்த அருந்ததியானவள், நட்சத்திரப் பதவியைப் பெறுவதற்கு முன், ஒருசமயம் இந்த புனிதமான இடத்திற்கு வந்தாள். இந்தத் திருமலைப் பகுதியில் தவம் செய்தால் வேண்டியது கிட்டும் என்று அருந்ததியின் உள் மனம் எண்ணியது. அதனால் அங்கேயே அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தாள்.
காலம் கடந்தது.. 

அன்று பங்குனி (உத்திரம்) பௌர்ணமி தினம்! அருந்ததியின் தவத்திற்கு மகிழ்ந்து அவள்முன் தோன்றினாள் ஸ்ரீ மகாலட்சுமி. ""அருந்ததி, உனக்கு என்ன வரம் வேண்டும்?'' என்று அன்னை கேட்க, ""தேவி உங்களை தரிசித்ததே ஜன்ம விமோசனம்'' என்றாள். 

"மகளே அருந்ததி, நீ சிறந்த தவத்தன்மையை பெற்று விட்டாய். உனது நினைவின் காரணமாக ஒவ்வொரு வருடமும் பங்குனி பௌர்ணமி நாளில் நீ தவம் செய்த இடத்தில் அமைந்துள்ள இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்கள் எனது அருளினை முழுமையாகப் பெறுவார்கள். மேலும், நீ விரும்பும் நட்சத்திரப் பதவியையும் பெறுவாய். திருமண நிகழ்ச்சியில் உன்னை தரிசித்தால்தான் அந்தத் திருமணம் முழுபலனையும் அடையும்'' என்று அருந்ததியை வாழ்த்தினார் மகாலட்சுமி.

ஆகவே, பங்குனி மாத பௌர்ணமி அன்று இந்த பங்குனி தீர்த்தத்தில் நீராடுபவர்களுக்கு ஸ்ரீமகாலட்சுமியின் முழுமையான அருள் கிட்டும் என்பது ஐதீகம்.  
- டி.ஆர். பரிமளரங்கன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com