பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

ஒருவன் தனக்குத் தீங்கு செய்யும் என்று நினைப்பதை மற்றவர்களுக்குச் செய்யக் கூடாது.
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

• ஒருவன் தனக்குத் தீங்கு செய்யும் என்று நினைப்பதை மற்றவர்களுக்குச் செய்யக் கூடாது. புலன்களின் அடக்கத்தால் தர்மம் உண்டாகிறது. தீய ஆசையின் காரணமாக அதர்மம் உண்டாகிறது. 
- விதுரநீதி
• சூரியன் பிரகாசித்துக் கொண்டிருந்தாலும், அது குருடனுக்குப் பயனில்லை. அதுபோல் இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் அதனால் அஞ்ஞானிகளுக்குப் பயனில்லை. 
- ஞானரத்னாவளி
• ஒரு நெல் மணி பல நெல் மணிகளாக விளைவது போன்று, ஒருவன் செய்யும் ஒரு வினையும் பல வினைகளுக்குக் காரணமாக இருக்கும்.  
- ஞானரத்னாவளி
• குருவாயூரின் தலைவனே! உன் திருவடித் தாமரை மலர்களில் செலுத்தப்படும் பக்தியே எல்லா பயங்களையும் போக்கும். விரும்பியவற்றை எல்லாம் கொடுக்கும் என்று நீயே எனக்கு உறுதியாக அறிவுறுத்தினாய்.
- நாராயணீயம்
• ஒருவன், சாஸ்திரங்கள் விதித்த சத் கர்மங்களைச் செய்துகொண்டு, பயனில் சிந்தையைத் துறந்து, ஆத்ம லாபத்தில் சந்தோஷத்தையடைந்து வாழ்பவன் முக்தி எய்துகிறான் என்பதில் சந்தேகமில்லை.         
- தேவீ பாகவதம்
• காதுக்கு அழகு நல்ல விஷயங்களைக் கேட்பதே தவிரக் குண்டலம் அன்று. கைக்கு அழகு தானமே தவிரக் கங்கணம் அன்று. கருணையே நிறைந்த மனித உடல் பரோபகாரத்தாலேயே பிரகாசிக்கிறது. சந்தனம் பூசுவதால் அல்ல. 
- பர்த்ருஹரி
• குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தைப் போதிப்பதற்குத் தகப்பனைவிடத் தாயே பெரிதும் தகுதியுள்ளவள்.
- வசிஷ்ட சூத்திரம்
• பிறவிகளுக்குக் காரணமாகவும், பிறவிகளை அழிப்பவனாகவும், பிறவி உருவினனாகவும், பிறவிச்சுழலால் தீண்டப்படாதவனாகவும் இருக்கும் சிவபெருமானுக்கு வணக்கம். 
- சிவஸ்தோத்ரவளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com