பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

நற்செயல்களில் ஈடுபடுபவனுக்கு உலகம் முழுவதும் சுகம் நிரம்பியிருக்கிறது. கடல் விரும்பாவிட்டாலும் நதிகளெல்லாம் கடலில் வந்து விழுகின்றன.
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

* நற்செயல்களில் ஈடுபடுபவனுக்கு உலகம் முழுவதும் சுகம் நிரம்பியிருக்கிறது. கடல் விரும்பாவிட்டாலும் நதிகளெல்லாம் கடலில் வந்து விழுகின்றன. அதுபோல் அறவழியில் நடப்பவர்களிடம் சுகமும் செல்வமும் அழைக்காமலே வந்தடைகின்றன.
- துளசி ராமாயணம்
* பகவான் தன்னைச் சார்ந்த நிச்சயபுத்தி உடைய பக்தர்களுக்குச் சொர்க்கத்திலோ பூமியிலோ பாதாளத்திலோ செல்வங்களைக் கொடுக்கமாட்டார். ஏனெனில் அவற்றால் பகை, வருத்தம், கவலை, கொழுப்பு, கஷ்டம், விபத்து, வீண்முயற்சி, பயனற்ற உழைப்பு முதலியன உண்டாகின்றன.
- பாகவதம்
* புண்ணியத் தலங்களுக்குப் பிரயாணம் சென்று வராத கால்கள், இறைவனைக் குனிந்து வணங்காத தலை, கெஞ்சிக் கேட்பவர்களுக்குக் கொடுத்து உதவாத கைகள், சான்றோர்களின் அறிவுரைகளைக் கேட்டுக் கிரகிக்காத காதுகள் ஆகியன இருந்தும் பயனற்றவையாகும்.
- விவேக சிந்தாமணி
* எவர் மனக்கலக்கம் அடைந்தால் உலக நன்மைக்குத் தீங்கு ஏற்படுமோ, அவர்கள் மனம் மகிழும்படி, தேவதைகளைப் போல அவர்களை நாம் நடத்த வேண்டும்.
- விதுரநீதி
* இரண்டு கருத்து மோதல்களுக்கும் இடையில் மனசாட்சிக்கு வளைந்து கொடுப்பவன்தான் உலகின் முன்பு நீதிமானாக உயர்ந்து நிற்க முடியும்.
- வேதவாக்கு
* அடியார்கள் தீயவர்களின் தீய சொற்களைப் பொறுத்துக்கொள்வது போன்று, மலை மழைத்துளிகளின் தாக்குதலைப் பொறுத்துக்கொள்கிறது.
- துளசி ராமாயணம்
* கர்வமும் மோகமும் இல்லாத நல்லவர்களின் இதயம் போன்று, ஆறுகளிலும் குளங்களிலும், நீர் மிகவும் தெளிவாகவும் தூய்மையாகவும் இருக்கிறது.
- துளசி ராமாயணம்
* ஜீவான்மாக்கள் கொண்டிருக்கும் வருத்தத்தைப் போக்குவதும், எளியவர்களுக்கு வேண்டிய உண்ணும் உணவைக் கொடுப்பதும் மோட்சத்திற்குச் செல்லும் வழியாகும்.
- சீவக சிந்தாமணி
* உலக இன்பங்கள் என்ற இந்த மகாபோகங்கள் யாவை? இந்த உறவினர்கள் யாவர்? சிறுவன் இருளைப் பிசாசு என்று நினைத்து பயப்படுவதுபோல் நான் கற்பனைகளைச் செய்துகொண்டு கலங்குகிறேன்.
- ஜனககீதை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com