கர்மவினை தீர்க்கும் கதித்தமலை குமரன்!

முருகப்பெருமான் குடிகொண்டுள்ள தலங்களுக்கெல்லாம் அகத்தியர் யாத்திரை செய்தார். ஒருமுறை இந்த ஊத்துக்குளி பகுதிக்கு வந்த அவருடன் நாரதமுனிவரும் வந்திருந்தார். 
கர்மவினை தீர்க்கும் கதித்தமலை குமரன்!

முருகப்பெருமான் குடிகொண்டுள்ள தலங்களுக்கெல்லாம் அகத்தியர் யாத்திரை செய்தார். ஒருமுறை இந்த ஊத்துக்குளி பகுதிக்கு வந்த அவருடன் நாரதமுனிவரும் வந்திருந்தார். 

அகத்தியர் கதித்தமலை முருகனுக்கு பூஜை செய்ய தண்ணீர் இன்றித் தவித்தார். உடனே முருகப்பெருமானை வேண்ட, முருகனும் மலையில் தம் வேலினை ஊன்றி ஒரு நீரூற்றினை ஏற்படுத்தினார். 

அகத்தியரும் தம் முருக வழிபாட்டினை சிறப்புடன் செய்தார். குழியிலிருந்து ஊற்று தோன்றியதால் ஊற்றுக்குழி - ஊத்துக்குழி ஆயிற்று. 

கொங்குநாட்டில் குன்றுதோறும்  கோயில்  கொண்டுள்ளகுமரனின் ஆலயங்களில் கதித்தமலை தனிச்சிறப்பு கொண்டது. 

வெண்ணெய் உற்பத்தியில் புகழ்பெற்று விளங்கும் இவ்வூர், திருப்பூர்- ஈரோடு சாலையில் 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்குச் செல்ல படிகட்டுகள் மட்டுமல்லாது தார்ச்சாலை வழியும் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் மேற்குப்பகுதியில் வள்ளி- தெய்வானை ஆகியோருக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது.  

மலையின் வடசரிவில் சிவபெருமானின் காளை வாகனத் திருவடியும் கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் சுப்பராயர் சந்நிதி என்னும் புற்றுக்கோயிலும் உள்ளது. நாகதோஷம், ராகு- கேது தோஷம் போன்றவற்றுக்கு பக்தர்கள் இங்கு வந்து சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர்.  வள்ளி- தெய்வானை சந்நிதிக்குச் செல்லும் வழியில் சுமார் 500 ஆண்டுகள் பழைமையான பாலை மரத்தின்அடியில் சுக்குமலையான் சந்நிதி உள்ளது. இப்பாலை மரத்தில் துணியால் தொட்டில் கட்டினால் மகப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை. 

தைப்பூசத்திற்கு அடுத்த நான்காம் நாள் மலைமீது கோயிலைச்சுற்றி  "மரத்தேரோட்டம்' நடைபெறுவது சிறப்பாகும்.
 - இரா. ஸ்டீபன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com