நிகழ்வுகள்

சென்னை, அசோக்நகர், 7 ஆவது அவென்யூவில் அமைந்துள்ள ஸ்ரீ ஸர்வபிரிய மஹாகணபதி ஆலயத்தில் 17 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி மஹோத்ஸவம்
சென்னை, அசோக்நகர், 7 ஆவது அவென்யூவில் அமைந்துள்ள ஸ்ரீ ஸர்வபிரிய மஹாகணபதி ஆலயத்தில் 17 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி மஹோத்ஸவம் நடைபெறுகின்றது. விஷ்ணு சகஸ்ராம பாராயணம்,  லட்சார்ச்சனை, வேத பாராயணம், நாம சங்கீர்த்தனம், தேவார, திருப்புகழ் இன்னிசை, ருண மோசன மஹாகணபதி ஹோமம், பக்தி சொற்பொழிவு, சுவாமி வீதி  உலா, அன்னதானம் போன்றவை நடைபெறும். 
நாள்: 21.8.2017 - 24.8.2017.
பால்குடம், காவடி, முளைப்பாரி எடுக்கும் விழா
சின்னமனூர் நகரம், சீப்பாலக்கோட்டை ரோடு, அகமுடையார் மக்கள் மன்றம் பின்புறம் அமைந்துள்ள ஸ்ரீ ஹரி மஹா கணபதி அருள்மிகு ஸ்ரீ வன்னி வில்வ விருட்ஷ தீர்த்த ஸ்ரீ ராஜயோக நாயகி சமேத, ஸ்ரீ ராஜலிங்கேஸ்வரர் ஆலயம், ஸ்ரீ சடையாண்டி சித்தர், ஸ்ரீ கோபால் சித்தர், ஸ்ரீ தோழியப்ப சித்தர் பீடத்தில் சித்தர் பெருமக்களுக்கு 5 ஆம் ஆண்டு பால்குடம், காவடி, முளைப்பாரி எடுக்கும் விழா நடைபெறுகின்றது.
தொடர்புக்கு:  98651 06535 / 96593 35272.
நாள்: 21.8.2017, நேரம்: காலை 5.00 மணிக்கு மேல்.
குருபூஜை
சிவகங்கை மாவட்டம், இளையான் குடி, ஸ்ரீ ஞானாம்பிகை உடனாய ஸ்ரீ ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயிலில் மாற நாயனார் திருக்கோயிலில் குருபூஜை விழா நடைபெறுகின்றது. இளையான்குடி மாறநாயனார் சுவாமிகளுக்கு சிவபெருமான் சோதியாய்த் தோன்றியும் உமையவளோடு சேர்ந்து இடப வாகனத்தில் திருக்காட்சி கொடுத்து ஆட்கொண்ட திருநாளான ஆவணி மாதம் மகம் நட்சத்திர நாளன்று மாற
நாயனார் குருபூஜை விழா நடைபெறுகின்றது. 
நாள்: 22.8.2017.
ஸ்ரீ குருதட்சிணாமூர்த்தி சுவாமிகள் குரு பூஜை
திருவாரூர், மடப்புரம், ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் 182 ஆவது ஆண்டு குருபூஜை விழா அவருடைய ஜீவ சமாதி வளாகத்தில் (கமலாலயம் அருகில்) ஆகஸ்ட் 24,  வியாழனன்று (உத்திரம்) நடைபெறுகின்றது.  அன்று காலை 5.00 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன.  சிறப்பு ஹோமங்கள், பூஜைகள், அன்னதானம் அளித்தலும்  நடைபெறும்.  மாலை இன்னிசை நிகழ்ச்சியும், இரவு முத்துப்பல்லக்கில் சுவாமிகளுடைய அலங்கரிக்கப்பட்ட விக்ரக வீதியுலாவும் நடைபெறுகின்றது.  ஏற்பாடுகளை தற்போதைய மடாதிபதி ஸ்ரீ. கிருஷ்ணானந்த சுவாமிகள் வழிகாட்டுதலின்படி மடத்து நிர்வாகிகள் செய்துள்ளனர்.  
தொடர்புக்கு : 94434 36393.
- ஜி. தட்சிணாமூர்த்தி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com