தீபம் ஏற்றுவோம்..! 

கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் விளக்கேற்றும் முறை நமது தமிழகத்தில் இருந்து வருகின்றது. தீபம் ஏற்றுவதன் மூலம் இல்லத்தில் நல்ல அதிர்வலைகள் உருவாகின்றன.
தீபம் ஏற்றுவோம்..! 

கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் விளக்கேற்றும் முறை நமது தமிழகத்தில் இருந்து வருகின்றது. தீபம் ஏற்றுவதன் மூலம் இல்லத்தில் நல்ல அதிர்வலைகள் உருவாகின்றன. தினசரி நாம் இல்லங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
"இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமசிவாயவே ''
- என்பது அப்பர் பெருமான் வீடுகளில் ஏற்றும் விளக்குகள் புற இருளை மட்டுமல்ல; அக இருளையும் போக்க வல்லது, விளக்கு ஏற்றிய வீடு வீணாய் போகாது எனத் தமிழில் ஒரு பழமொழி உண்டு. 
தீபத்தின் சுடருக்குத் தன்னைச் சுற்றியுள்ள தேவையற்ற எதிர்மறை சக்திகளை ஈர்த்து, அழிக்கும் ஆற்றல் உண்டு அவ்வாறு தேவையற்ற எதிர்மறை சக்திகள் ஈர்த்து எரிக்கப்படும் பொழுது, இல்லத்தில் நேர்மறை சக்திகள் அதிகமாகின்றன.
நம் உடலில் உள்ள ஆதாரச் சக்கரங்களைத் தூண்டும் ஆற்றல் விளக்கொளிக்கு உண்டு, மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகின்றது. மணிபூரகம், அநாஹதமும் நெய்விளக்கு ஏற்றுவதால் தூய்மை அடைகின்றது. நம் உடலில் உள்ள சூரிய நாடி நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகின்றது. சந்திரநாடி குளுமையைத் தருகின்றது. சுழுமுனை நாடி ஆன்மீகத் தொடர்பை அதிகரிக்கச் செய்கின்றது. நல்லெண்ணெய் விளக்கினால் சூரியநாடி சுறுசுறுப்படைகிறது. நெய்விளக்கினால் சுழுமுனை நாடி முன்னேற்றம் காண்கிறது.
காலையில் எழுந்தவுடன் வீட்டின் புறக்கதவை, பின்பக்க கதவைத் திறந்து வைத்துவிட்டுப் பின்னர் வாசற் கதவைத் திறந்து வாசல் தெளித்துக் கோலமிட்டு தீபமேற்றவேண்டும். அபார்ட்மெண்ட் வீடுகளில் பின் கதவு கிடையாது என்றால் வீட்டின் வலது பக்க கடைசி ஜன்னலைத் திறந்து விட்டு வாசற் கதவினைத் திறக்க வேண்டும். இரவு முழுவதும் இருந்த சோம்பல், தூக்கம், அசதி ஆகியவற்றைப் புறம் தள்ளி விட்டு, அதிகாலையில் வாசற்கதவினைத் திறந்து உற்சாகம், சுறுசுறுப்பு தெய்வீக ஆற்றலை வரவேற்று அவை நிலைப்பதற்காகத் தீபம் ஏற்றவேண்டும். 
மாலை நேரத்தில் பின்பக்கக் கதவினைச் சார்த்தி விட்டு வாசல் கதவினைத் திறந்து வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். தெற்கு திசை தவிர மற்ற மூன்று திசைகளிலும் அவரவர் வீட்டு வசதிக்கேற்ப விளக்கேற்றிக் கொள்ளலாம். 
திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் சிவபெருமான் சந்நிதியில் இருந்த நெய்விளக்கு ஒன்று அணையும் தருவாயில் இருந்தது. அந்த விளக்கில் இருந்த நெய்யை அருந்த வந்த எலியானது நெய்யை அருந்தும் போது அதனை அறியாமல் விளக்கினைத் தூண்டிவிட்டது. இறைவன் சந்நிதியில் விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. இதனால் மகிழ்வடைந்த சிவபெருமான், அந்த எலியை மறுபிறப்பில் அனைத்துச் செல்வங்களையும் வழங்கி மகாபலிச் சக்ரவர்த்தியாக்கினார். என்பது தல வரலாறாகும்.
கார்த்திகை மாதம் தீபத்திருநாள் மாதமாகும். பருவச் சூழல் மாறும் காலமாகும். இந்த மாதத்தில் தினசரி மாலை நேரத்தில் வீட்டின் முன்புறமுள்ள வாசல்படிகளின் இருபுறத்திலும் விளக்குகளை ஏற்றி வழிபடுவதன் மூலம் பதினாறு பேறுகளும் கிடைத்திடும் என்பது உறுதியாகும். 
- மீனாட்சி ஸ்ரீநிவாஸன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com