மக்கள் சேவை செய்ய அழைக்கும் இயேசு!

"இதோ சீக்கிரமாய் வருவேன்'' என்று வேதாகமம் இயேசுவின் இரண்டாம் வருகைப் பற்றி கூறுகிறது.
மக்கள் சேவை செய்ய அழைக்கும் இயேசு!

"இதோ சீக்கிரமாய் வருவேன்'' என்று வேதாகமம் இயேசுவின் இரண்டாம் வருகைப் பற்றி கூறுகிறது. இயேசு இரண்டாம் வருகையில் நீதிபதியாக, ராஜாவாக வானத்திலிருந்து இறங்கி வருவார். அப்போது நியாயத் தீர்ப்பு நடக்கும். இயேசுவின் பக்தர்கள் அனைவரும் பரலோகம் செல்வர். தண்டிக்கப் பட்டவர்கள் நரகம் செல்வர். 
இவ்வருகைப் பற்றிய விவரத்தை இயேசு (மத்தேயு 25:31-46) விவரித்து கூறுகின்றார். வானத்திலிருந்து வரும் நாளில் இப்பூமியில் உள்ள யாவரும் வலது இடது பக்கமாக பிரிந்து நிற்பார்கள். 
அப்போது மேய்ப்பனானவன் செம்மறியாடு தளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிறிக்கிறது போல அவர்களை அவர் பிரிப்பார்.
அப்போது ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ""வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப் பட்டவர்களே.. உலகம் உண்டானது முதல் உங்களுக்குக்காக, ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள். தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள். அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக் கொண்டீர்கள். உடையில்லாமல் இருந்தேன், எனக்கு உடை கொடுத்தீர்கள். காவலில் இருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்'' என்பார். 
"ஆண்டவரே, நீர் பசியாயிருந்தீர் நாங்கள் உணவு கொடுத்தோம். எப்போது உடையில்லாமல் இருந்தீர், நாங்கள் உமக்கு உடை கொடுத்தோம்? எப்போது தாகமாக இருந்தீர், தாகம் தீர்த்தோம்? எப்போது நீர் நோயாளியாக மருத்துவமனையில் இருந்தீர், நாங்கள் விசாரிக்க வந்தோம்?'' என்றார்கள்.
இயேசுவோ ""பிரதியுத்தரமாக மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்!'' என்றார்.
அப்படியே இடது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, "சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு போங்கள் பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்
பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், எனக்கு உணவு கொடுக்கவில்லை. தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்க்கவில்லை. அந்நியனாயிருந்தேன் என்னை சேர்த்துக் கொள்ளவில்லை. உடையில்லாமல் இருந்தேன், உடை கொடுக்கவில்லை. வியாதியுள்ளவனாயிருந்தேன், காவலில் இருந்தேன், என்னைப் பார்க்கவில்லை'' என்றார். 
இடது பக்கமுள்ளவர்கள் "ஆண்டவரே, எப்போது நீர் பசியாய், தாகமுள்ளவராய், அந்நியராய், உடையில்லாதவராய் நோயாளியாய் சிறையில் இருந்தீர். அப்படி நாங்கள் உம்மைப் பார்த்திருந்தால் நிச்சயம் உதவியிருப்போமே'' என்றார்கள். ராஜா அவர்களிடம் ""மிகவும் சிறியவரான இவர்களுக்கு எதைச் செய்யவில்லையோ அதை நீங்கள் எனக்கு செய்யவில்லை'' என்றார்.
மனிதரின் உலக வாழ்வின் முதன்மையான நோக்கம் பிறருக்கு நலம் பாராட்டி, உதவி செய்து அன்பு செலுத்தி வாழ்வதே இறைவனை தொழுவதற்குச் சமம். 
மனிதநேயமும் உலகில் உள்ள அனைத்து இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களிடம் அன்பு பாராட்டி வாழ்வதே இறைவனின் விருப்பம். அவ்வாறு ஏழை எளியவர்களுக்குச் செய்யப்படும் உதவி இறைவனுக்கே செய்யப்பட்டதாக இயேசு கூறுகின்றார். 
- தே. பால் பிரேம்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com