ருத்திரனுக்கு ருத்ராட்ச வழிபாடு!

சமீப காலங்களில் இயற்கை சீற்றத்தால் இம்மண்ணில் வாழும் மானிடர்களும், பிற உயிரினங்களும் சொல்லொண்ணா இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்
ருத்திரனுக்கு ருத்ராட்ச வழிபாடு!

சமீப காலங்களில் இயற்கை சீற்றத்தால் இம்மண்ணில் வாழும் மானிடர்களும், பிற உயிரினங்களும் சொல்லொண்ணா இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இதற்கு காரணம் பலகாலமாக, நாம் இயற்கைக்கு அழிவை ஏற்படுத்தியதால், பல காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. பல குளங்கள், ஏரிகள், நதிகள் இருந்த இடம் தெரியவில்லை. மண் மட்டுமல்லாது மக்களும் மலட்டுத்தன்மை அடைந்துவிட்டனர். இதற்கு தீர்வு பஞ்சபூதங்களாகிய நிலம் (ந), நீர்(ம), நெருப்பு(சி), காற்று (வா), ஆகாயம் (ய) இவற்றின் தலைவனாக விளங்கும் சர்வேஸ்வரனுக்கு ருத்திராட்ச அர்ச்சனை செய்வதே ஆகும். இதனால் இயற்கை அன்னையின் கோபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றலாம். இந்த எண்ணத்தின் அடிப்படையில் ஒரு சிறு முயற்சியாக, இமயமலைப்பகுதியில் சிலகாலம் தவ வாழ்க்கை மேற்கொண்ட சாது யோகி குமார் என்ற சிவனடியார் சில முக்கிய சிவத்தலங்களில் ருத்ராட்சம் கொண்டு சிவார்ச்சனை ஏற்பாடுகளை செய்து வருகின்றார்,
அவ்வகையில் கடந்த நவம்பர் மாதம் அச்சிரப்பாக்கம் ஸ்ரீ ஆட்சிபுரீஸ்வரர் ஆலயத்திலும், டிசம்பர் முதல் வாரத்தில் திருநின்றவூர் ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஆலயத்திலும் 10,008 ருத்ராட்சத்தால் சங்கு நாதம் மற்றும் கைலாய வாத்தியம் முழங்க வெகு சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் பெருமளவில் கலந்துகொண்டதே இதற்கு தகுந்த சாட்சி.
தொடர்ந்து இந்த ருத்ராட்ச அர்ச்சனை டிசம்பர் -17 ஆம் தேதி குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் சுவாமி ஆலயத்திலும், டிசம்பர் -24 ஆம் தேதி திருவையாறு ஸ்ரீ ஐயாறப்பர் ஆலயத்திலும், டிசம்பர் -31ஆம் தேதி பாண்டிச்சேரி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும் நடைபெறுகின்றது.
திருவையாறு திருத்தலத்தில் டிசம்பர் -23 ஆம் தேதி மாலை கன்னியா பூஜை வழிபாடும், ருத்ராட்ச மந்திர ஜபமும் (உரு ஏற்றுதல்) நடைபெற்று மறுநாள் டிசம்பர் -24 ஆம் தேதி காலை 9.00 மணி அளவில் கைலாய வாத்தியம் மற்றும் சங்கு நாதம் முழங்க, 1,08,000 இயற்கையாய் பரிசுத்தமாக கிடைக்கப்பெற்று எவ்விதச் சாயமும் பூசாமல் ஐந்து முகங்கள் கொண்ட ருத்ராட்ச மணிகள், ருத்ராட்சங்களைக் கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலை வலம் வந்து ஈசன் பாதத்தில் அர்ச்சகர் மூலமாக ருத்ராட்சங்களை அர்ச்சனைகளாக சமர்ப்பிப்பார்கள்.
ருத்திராட்சம் என்றால் ருத்திரனுடைய கண் என்பது பொருள். ருத்திரம் + அட்சம் = ருத்திராட்சம் (ருத்திராக்ஷம்) . அட்சம் (அக்ஷம்) என்றால் கண் என்று பொருள். சிவ நாமமே கங்கை, விபூதியே யமுனை, ருத்திராட்சமே சர்வ பாவங்களையும் போக்கும் சரஸ்வதி என்று பழைய புராணங்கள் இயம்புகின்றன.
எனவே கிடைத்தற்கரிய இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று வாழ்வில் எல்லா நலன்களையும் பெற்று இயற்கைச் சீற்றத்திலிருந்து நம்மைக் 
காப்பாற்றிக் கொள்ளலாம்.
தொடர்புக்கு : 98418 26925/ 95972 25554.
- எஸ். வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com