நிகழ்வுகள்

செங்கல்பட்டு அருகில் சிங்கபெருமாள் கோயிலுக்கு மேற்கில் அமைந்துள்ள குளத்தூர் கிராமத்தில் ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் ஆலயத்தில்

மகாசிவராத்திரி விழா
செங்கல்பட்டு அருகில் சிங்கபெருமாள் கோயிலுக்கு மேற்கில் அமைந்துள்ள குளத்தூர் கிராமத்தில் ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மாலை பிரதோஷ பூஜையும் தொடர்ந்து இரவு முழுவதும் சிவராத்திரி நான்கு கால பூஜைகள்,
அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு: 94440 22133.
நாள்: 24.2.2017.
••••••••••••••••
தாம்பரம் படப்பை அடுத்த எழுச்சூர் நல்லிணக்கீஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு, பிரதோஷ பூஜை, நான்கு கால சிறப்பு அபிஷேகங்கள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தொடர்புக்கு: 94443 49009.
நாள்: 24.2.2017.
••••••••••••••••
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், திருக்கழுக்குன்றத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் திருநிலை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பெரியாண்டவருக்கு மகா சிவராத்திரி விழா நடைபெறுவதை முன்னிட்டு தேவார இசை பாடல், மகாவேள்வி, சிவபுராணம் நாடகம், ஸ்ரீ பெரியாண்டவர், ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலாவும் நடைபெறுகின்றது. மேலும் சிறப்பு அன்னதானம், மூன்று கால பூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு
ருத்திராட்சம் வழங்கப்படும்.
தொடர்புக்கு: 98427 40957.
நாள்: 24.2.2017.
•••••••••••••••
சென்னை, கிழக்கு தாம்பரம், 55, அகஸ்தியர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ஜகத்குரு பதரி ஸ்ரீ சங்கராசார்ய மடத்தில் மகாசிவராத்ரி மஹோத்ஸவம் நடைபெறுகின்றது. ஸ்ரீவித்யாபீடாதீஸ்வர ஸ்ரீ ஜகத்குரு பதரி ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்ரீ வித்யாபிநவ ஸ்ரீஸ்ரீ க்ருஷ்ணாநந்த தீர்த்த மஹா சுவாமிகள் நான்கு கால பூஜைகள், அபிஷேகங்களுடன் விமரிசையாக நடத்துகின்றனர். அன்று காலை 7.00 மணிக்கு சிவ பஞ்சாக்ஷர
ஜபத்துடன் மஹோத்ஸவம் தொடங்குகிறது. மறுநாள் பூஜை முடிந்தவுடன் ஸ்ரீஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளால் தீர்த்த பிரசாதம் வழங்கப்படும்.
தொடர்புக்கு: 044-2239 7900 / 94440 38024.
நாள்: 24.2.2017, நேரம்: மாலை 7.00 முதல் மறுநாள் காலை 5.00 மணி வரை.
••••••••••••••••
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நாகலாபுரத்திற்கு அருகில் உள்ள சுருட்டப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகா சமேத ஸ்ரீ வால்மிகீஸ்வரர் சுவாமி, ஸ்ரீ ஸர்வ மங்களா சமேத ஸ்ரீ பள்ளிகொண்டேஸ்வர சுவாமி ஆலயத்தில் மகாசிவராத்திரி பிரம்மோத்ஸவம் பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 24 ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு பிரதோஷ பூஜையைத் தொடர்ந்து மகாசிவராத்திரி நான்கு கால பூஜைகளும் நடைபெறும். பிப்ரவரி 26 ஆம் தேதி காலை திரிசூல ஸ்நானம் மற்றும் கலசாபிஷேகம் நடைபெற்று மாலை ராவணாசூர வாகனத்தில்
திருவீதியுலாவுடன் விழா நிறைவு பெறும்.
தொடர்புக்கு: 73820 05038.
•••••••••••••••••
சென்னை, திருவான்மியூர், பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் சமாதி நிலையத்தில் மகாசிவராத்திரி விழா, நான்கு கால பூஜையுடன் நடைபெறும். சிவராத்திரியில் சிறந்த நேரம் "இலங்கோத்பவகாலம்' (இரவு 11.30 மணி முதல் 1.00 மணி வரை) ஆகும்.
தொடர்புக்கு: 044 2532 5368.
"ஸ்ரீ ராம நாம' ராமாயணம்
சென்னை, சித்தாலப்பாக்கம்,மேடவாக்கம்- மாம்பாக்கம் சாலையில் அமைந்துள்ள தென் மந்த்ராலயம்- குரு பரிகார தலம் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ விஸ்ரூப அனுமான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி திருக்கோயில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம் அமைந்துள்ளது. இங்கு, ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 13 ஆவது ஆயுர்பவோத்ஸவம், 422 ஆவது பிறந்த தினம், 396 ஆவது பட்டாபிஷேக தினம் கூட்டு வழிபாடு, அன்னதானத்துடன் கொண்டாடப்
படுகிறது.
தொடர்புக்கு: 044- 4466 6930.
நாள்: 2.3.2017.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com