அசுப யோகம்

ஐந்தாம் வீட்டிற்கு இது பாமர யோகமாகும். பகுத்தறியும் திறன் அமையாமல் போகும்.

(சென்ற வாரத் தொடர்ச்சி)
ஐந்தாம் வீட்டிற்கு இது பாமர யோகமாகும். பகுத்தறியும் திறன் அமையாமல் போகும். தெய்வபக்தி, மனிதாபிமானம் ஆகியவை அமைவதற்கு இடமிராது. கெட்ட சேர்க்கையும் பெறுவார்கள். சந்தான பாக்கியத்திற்கும் குறைவு வரும்.

ஆறாம் வீட்டிற்கு இது ஹர்ஷ யோகமாகும். ஆறாம் வீட்டோன் துர்ஸ்தானங்கள் எனப்படும் 6,8,12 இல் அமர்ந்தால் சில சிறப்புகள் உண்டு. ஜாதகர் நற்பணிகளைச் செய்வார். அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கும் இடமுண்டு. பெயரும் புகழும் ஏற்படும். (இந்த யோகம் சுப யோகம்).

ஏழாம் வீட்டிற்கு இது துஷ்க்ருத் யோகமாகும். இதன் மூலம் ஜாதகர் தனித்து வாழ நேரும். காரணமில்லாமல் அலைய நேரும். மனைவியைப் பிரிவார். உற்றார் உறவினர் சேர்க்கை இல்லாமல் போகும். அரசாங்கத் தொல்லைக்கும் இடமுண்டு.
எட்டாம் வீட்டிற்கு இது ஸரள யோகமாகும். எட்டாம் வீட்டோன் 6,8,12 இல் இருப்பது நல்லது. நீண்ட ஆயுள், உறுதி படைத்த உள்ளம், அஞ்சாமை, அறிவாற்றல், செல்வம் ஆகியவை அமையும். செய்கின்ற தொழிலில் பெருமையும் புகழும் பெறுவார். (இதுவும் சுப யோகமே).

ஒன்பதாம் வீட்டிற்கு இது நிர்பாக்கிய யோகமாகும். அதாவது அதிர்ஷ்டமற்ற நிலை. மூதாதையர் சொத்துகள் இழப்பார். மனிதாபிமானம் இல்லாமல் போகும். இன்பமான வாழ்வும் அமையாமல் போகும்.

பத்தாம் வீட்டிற்கு இது துர்யோகமாகும். தன் முயற்சியில் தோல்வி, கடுமையாக உழைத்தாலும் வெற்றிக்கு இடமிராது. வெளிநாடு சென்று வாழ நேரிடும். அங்கேயும் சிறப்பான நிலை உண்டாகாமல் போகலாம்.

பதினொன்றாம் வீட்டிற்கு இது தரித்திரயோகமாகும். அதாவது வறுமை என்று பொருள். கடனாளியாக நேரிடும். சகோதர நலத்திற்கு ஊறு விளையும்.

பன்னிரண்டாம் வீட்டிற்கு இது விமல யோகமாகும். பன்னிரண்டாம் அதிபதி 6,8,12 இல் இருப்பது சிறப்புடையது. இது செல்வ சேர்க்கையை உண்டு பண்ணும். நல்லபடி தொழில் செய்து ஜாதகர் சிறப்பாக வாழ்வார் (இதுவும் சுப யோகமே)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com