வேதங்கள் கூறும் சூரியன்

ரிக்வேதம், சவிதா, பகன், விஷ்ணு, கேசரி, வைசுவாந்ரன், பூஷா, விருஷாகலி ஆகிய பெயர்களால் சூரியனைப் போற்றுகிறது. மேலும் "சூரியனே காலத்தின் கடவுள்' என்கிறது.
வேதங்கள் கூறும் சூரியன்

ரிக்வேதம், சவிதா, பகன், விஷ்ணு, கேசரி, வைசுவாந்ரன், பூஷா, விருஷாகலி ஆகிய பெயர்களால் சூரியனைப் போற்றுகிறது. மேலும் "சூரியனே காலத்தின் கடவுள்' என்கிறது.
யஜுர் வேதம், "நீ வெற்றியுடையவன், ஜோதியை அளிப்பவன், நீ எல்லாவற்றையும் காண்பவன், எவ்வுலகையும் ஒளிரச் செய்பவன், அனைவருக்கும் பொதுவானவன்' என்று புகழ்கிறது.
சாமவேதம், "சூரியன் மக்களைப் பாதுகாப்பவன், வரம் தருபவன். இயங்குவன, நிற்பன ஆகிய அனைத்திற்கும் ஆன்மாவாகி, வானத்தையும் இந்த உலகத்தையும் நிரப்புகிறான் சூரியன்' என்கிறது. 
"பசுவின் சாணத்திலுள்ள புழுக்களையும் சூரியன் ஒழிப்பான். கண்களுக்குத் தெரியாத கிருமிகளையும் அழிப்பான்' என்கிறது அதர்வண வேதம்.
இருள்மயமான அண்டத்தை பரப்பிரம்மம் பிளந்தபோது "ஓம்' என்ற ஒலி உண்டாயிற்று. அந்த ஒலியிலிருந்து மிகப் பிரகாசமாக சூரியன் தோன்றினான்' என்கிறது மார்க்கண்டேய புராணம். 
"சிவபெருமான், சூரியமண்டலத்தின் நடுவே ஒளிர்கிறார். சூரியன், சிவபெருமானின் அஷ்டமூர்த்தங்களில் ஒருவராவார். சூரியனை தமது வலது கண்ணாகப் பெற்றிருக்கிறார்' என்று விவரிக்கின்றன சிவாகமங்கள். 
"பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்தி வடிவமாக விளங்குகிறார் சூரியன். மேரு மலையை வலம் வருகிறார். கிரகங்களுக்கும் நட்சத்திர மண்டலங்களுக்கும் தன் சுடரை வழங்குகிறார். மேலும் மழை, பனி, வெப்பம் ஆகியவற்றையும் பருவ நிலையையும் உண்டாக்குகிறார். அவருடைய தேருக்கு ஒற்றைச் சக்கரம் அதற்கு, பன்னிரண்டு ஆரக்கால்கள். அந்தத் தேரினை வேதத்தின் ஏழு சந்தங்களும் ஏழு குதிரைகளாக அமைந்து இழுக்கின்றன. இந்த ஏழு சந்தங்களும் ஏழு குதிரைகளும் வாரத்தின் ஏழு நாள்களைக் குறிக்கும். பன்னிரண்டு ஆரக்கால்கள் ஒரு வருடத்தில் வரும் பன்னிரண்டு மாதங்களைக் குறிப்பிடுகின்றன' என்று பாகவதம் கூறுகிறது.
"சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு பெயரைப் பெறுகிறான்' என்கிறது சூரிய புராணம். 
சின்முத்திரையுடன் சனிபகவான்!
சிவாலயங்களில் நவக்கிரகத் தொகுப்பில் காட்சி தரும் சனிபகவான், மேற்கு நோக்கி அருள்புரிகிறார். இவரது நான்கு கரங்களிலும் ஆயுதங்கள் இருக்கும். ஆனால், திருநள்ளாறு திருத்தலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தரும் சனிபகவான், சின்முத்திரையுடன் தவக்கோலத்தில் காட்சி தருகிறார். அமர்ந்த கோலத்தில் அருள்புரியும் இந்த சனீஸ்வரரை வழிபட, சனியின் தாக்கம் குறையும் என்பர். இத்தலத்தில் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்ததும் அந்தப் பிரசாதத்தை அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட வேண்டும் என்பது விதியாகும். பரிகாரப் பொருளாக இக்கோயில் வளாகத்தில் குடை, செருப்பு ஆகியவைகளும் விற்கப்படுகின்றன. 
பூனைக்கு பிரசாதம்!
சக்தி பீடங்களில் "நாபி' பீடம் என்று போற்றப்படும் காஞ்சி காமாட்சி அம்மனை, மகரிஷிகள் பூனை வடிவில் வந்து தினமும் வழிபடுவதாக ஐதீகம். எனவே, தினமும் அர்த்த ஜாமபூஜை முடிந்ததும் அம்மனுக்கு நிவேதித்த பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து விடுவது வழக்கம். அங்கு வரும் பூனை ஒன்று அந்தப் பாலை பருகிவிட்டு செல்வதைக் காணலாம். அம்பிகையை பூனை வடிவில் வரும் ரிஷிகளே இந்தப் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு, தரிசித்துச் செல்வதாக ஐதீகம்! இந்த நடைமுறை இப்போதும்கூட உள்ளது என்று கூறப்படுகிறது.
- டி.ஆர். பரிமளரங்கன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com