பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

ஒரு தரம் சொன்னால் அறிந்துகொள்ளக்கூடியவனுக்கே உபதேசம் செய்வதில் லாபம் உண்டு.    

• ஒரு தரம் சொன்னால் அறிந்துகொள்ளக்கூடியவனுக்கே உபதேசம் செய்வதில் லாபம் உண்டு.    
- பஞ்சதந்திரம்

• தாராள மனமில்லாதவன் வீட்டில் உணவு கொள்ளாதே. ஏனெனில் அவன் அளிக்கும் உணவு அத்தனையும் விஷம் போன்றது.
- ரிக் வேதம்

• சாந்தி அளிக்கும் தெய்வமே எனக்கு சாந்தி நல்குவதாக! சுவர்க்கம், அந்தரிக்ஷம், பூமி ஆகியவற்றில் அமைதி நிலவுவதாக!
- யஜுர் வேதம்

• வேதத்தினால் விளக்கப்பட்டிருப்பதும், இம்மையிலும் மறுமையிலும் மேன்மை எய்துவதையே குறிக்கோளாய்க் கொண்டுள்ள ஒவ்வொரு மனிதனும் விரும்புவதும் எதுவோ அதுவே தர்மம்.
 - மீமாம்ஸா தரிசனம்

• நாம் தர்மத்தைப் பாதுகாத்தால் அதுவும் நம்மைப் பாதுகாக்கிறது. நாம் தர்மத்தை அழிக்க முற்பட்டால் அது நம்மையே அழித்துவிடும்.

• எந்த உயிரையும் நான் கொல்லமாட்டேன்; பிறரைக் கொண்டு எந்த உயிரையும் கொல்விக்கமாட்டேன்; எந்த உயிரும் கொல்லப்படுவதற்கு நான் உடன்படவும் மாட்டேன்.
-  மகாபாரதம்

• எல்லா இனத்தவரும் சமமே. எல்லாத் திசைகளும் முக்கியம் வாய்ந்தவைதான்.

• மகன் தந்தையின் விருப்பத்தின்படி நடக்கட்டும், தாயும் மகனின் மனமொத்து இருந்து வரட்டும், மனைவி கணவனிடம் இனிய மொழியே பேசட்டும்.    
- அதர்வண வேதம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com